தேடுதல்

திருப்பீட பன்னாட்டு மரியா கழகத்தின் உறுப்பினர்கள் சந்திப்பு திருப்பீட பன்னாட்டு மரியா கழகத்தின் உறுப்பினர்கள் சந்திப்பு 

c-9 கர்தினால்களின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 29,30

திருப்பீடத்தின் சீரமைப்புக்கு ஆலோசனை வழங்கும் கர்தினால்கள் அவையின் ஆறு பேர், இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில், இணையதளம் வழியாக மெய்நிகர் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

போர்கள் நிறைந்த சூழலில் உணவு குறைந்து, ஆயுதங்களின் பேரிடி வளர்ந்துவரும்வேளை, அமைதிக்காக நாம் தொடர்ந்து கடவுளை மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தி வழியாக அழைப்புவிடுத்துள்ளார்.

கிழக்குத் திருஅவைகளுக்கு உதவுகின்ற ROACO என்ற திருஅவை அமைப்பின் பிரதிநிதிகளை, ஜூன் 23,  இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து ஆற்றிய உரையை மையப்படுத்தி இச்செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, கடுமையான போர்கள் இடம்பெற்றுவரும் இடங்களில், அமைதியின் பாதைகள் கண்டுபிடிக்கப்படும்வண்ணம், இறைவேண்டல், உண்ணாநோன்பு, பிறரன்பு, மற்றும் சேவைகள் ஆகியவற்றை நிறுத்திவிடாமல் தொடர்ந்து ஆற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

கர்தினால்கள் கூட்டம்

மேலும், திருப்பீடத்தின் சீரமைப்புக்கு ஆலோசனை வழங்கும் கர்தினால்கள் அவையின் ஆறு பேர், இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில், இணையதளம் வழியாக மெய்நிகர் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

'Praedicate Evangelium' என்ற புதிய திருத்தூது கொள்கை விளக்கம் குறித்த கருத்துக்களை கர்தினால்கள் வழங்கினர் என்றும், இவர்களின் அடுத்த கூட்டம் வருகிற ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2022, 15:51