திருத்தந்தை, அர்ஜென்டீனாவின் முன்னாள் அரசுத்தலைவர் சந்திப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
தூய ஆவியார் நம்மில் குடிகொள்வதாலேயே, கடவுளை “Abba — அப்பா” என நம்மால் அழைக்க முடிகிறது, அந்த ஆவியாரே, நம் உள்ளாழத்தில் மாற்றத்தைக் கொணர்கிறார், மற்றும், கடவுளின் உண்மையான பிள்ளைகளாக, அவரால் அன்புகூரப்படுவதன் மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்கிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூன் 11, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்.
மேலும், அர்ஜென்டீனா நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் Eduardo Alberto Duhalde Maldonado அவர்கள் ஜூன் 11, இச்சனிக்கிழமை காலை பத்து மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் தனியே சந்தித்து உரையாடினார் என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல், மற்றும், சைப்ரஸ் நாடுகளின் திருப்பீடத் தூதரும், எருசலேம் மற்றும், பாலஸ்தீனாவின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியுமான பேராயர் Adolfo Tito Yllana அவர்களையும், அவர்களைச் சார்ந்த நாற்பது பேரையும் திருத்தந்தை சந்தித்து உரையாடினார் என்றும், திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
உரோம் மறைமாவட்டத்தின் செயலர் பேரருள்திரு Pierangelo Pedretti, ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet, கர்தினால் சில்வானோ தொமாசி, இயேசு சபை அருள்பணி Gianfranco Ghirlanda, பேராயர் Salvatore Fisichella ஆகியோரையும், இச்சனிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் சந்தித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்