தேடுதல்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  

கர்தினால் பரோலின்: தென் சூடான், காங்கோ பயணம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் பரோலின் அவர்கள், ஜூலை 1, வருகிற வெள்ளி முதல் ஜூலை 8ம் தேதி வரை மேற்கொள்வார்

மேரி தெரேசா: வத்திக்கான்

காங்கோ மக்களாட்சி குடியரசு, மற்றும், தென் சூடான் நாடுகளுக்கு மேற்கொள்ளவிருந்த திருத்தூதுப் பயணத்தை, தனது முழங்கால் மூட்டுவலி காரணமாக, தள்ளிவைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மக்களோடு தனது உடனிருப்பைத் தெரிவிக்கும்வண்ணம், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களை அந்நாடுகளுக்கு அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளார்.

கர்தினால் பரோலின் அவர்கள், ஜூலை 1, வருகிற வெள்ளி முதல் 8ம் தேதி வரை, காங்கோ மக்களாட்சி குடியரசு, மற்றும், தென் சூடான் நாடுகளின், கின்ஷாசே மற்றும், ஜூபா தலைநகரங்களில் மக்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான முழங்கால் மூட்டுவலி மற்றும் மருத்துவர்களின் வலியுறுத்தலின்பேரில், இவ்விரு ஆப்ரிக்க நாடுகளுக்கு தான் மேற்கொள்ளவிருந்த திருத்தூதுப் பயணத்தை தள்ளிவைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்கிடையே, ஜூலை 3, வருகிற ஞாயிறன்று உரோம் நகரிலுள்ள காங்கோ மக்களாட்சி குடியரசு மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றுவார். அதே நாளில், கர்தினால் பரோலின் அவர்கள், கின்ஷாசா நகரில் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார். 

இவ்விரு ஆப்ரிக்க நாடுகளுக்கு திட்டமிடப்பட்ட நாள்களில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள இயலாமல் இருப்பதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2022, 15:37