தேடுதல்

புதன் பொது மறைக்கல்வியுரை 2022.06.22 புதன் பொது மறைக்கல்வியுரை 2022.06.22  

திருத்தந்தை: துயருறும் உக்ரைன் மக்களை மறக்காதிருப்போம்

ஜூன் 22, புதன் உள்ளூர் நேரம் மாலை 6.45 மணிக்கு, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில், பத்தாவது உலக குடும்பங்கள் மாநாட்டில் பங்குபெறுவோருக்கு உரையாற்றுகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைன் நாட்டில் தியாகப்பலியாகிவரும் மக்களின் துன்பங்களை மறக்காதிருப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 22, இப்புதன் காலையில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வழங்கிய பொது மறைக்கல்வியுரைக்குப் பின்னர் கேட்டுக்கொண்டார்.

இந்த வளாகத்தில் நான் வந்த வாகனத்தில் என்னோடு வந்தவர்கள் உக்ரேனியச் சிறார் என்று சொல்லி, உக்ரைன் நாட்டை மறக்காமல் இருப்போம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இன்னும், இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் பங்குபெற்ற போலந்து நாட்டுத் திருப்பயணிகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று உரோம் நகரில் பத்தாவது உலக குடும்பங்கள் மாநாடு தொடங்கியிருப்பது குறித்து குறிப்பிட்டார்.

போலந்து நாட்டுக் குடும்பங்கள் அனைத்தும், ஒருவர் மற்றவர் மீது செலுத்தும் அன்பில் உறுதியான தன்மை, மற்றும், புனிதத்துவத்திற்கான அழைப்பை உணரவேண்டும்  என்றுரைத்த திருத்தந்தை, சில இன்னல்களை எதிர்கொள்ளும் குடும்பங்கள், தினமும் கடவுளின் பிரசன்னம், மற்றும், அவரின் இரக்கத்தை அனுபவிக்குமாறு, அவர்களுக்காகச் செபிக்கின்றேன் என்று கூறினார்.

Simon Wiesenthal Center

மேலும், ஜூன் 22, இப்புதன் உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள சிறிய அறையில், Simon Wiesenthal யூத மையத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1993ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Simon Wiesenthal யூதமத மையம், யூதமதவிரோதப்போக்கு மற்றும், ஏனையப் பாகுபாட்டு முறைகளுக்கு எதிராகச் செயலாற்றி வருகிறது

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 June 2022, 15:22