உலகில், ஐரோப்பாவில் அமைதி நிலவ அன்னை மரியாவிடம் செபிப்போம்
மேரி தெரேசா: வத்திக்கான்
இறைவனின் அன்னையும், நம் அன்னையுமான மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தில், தனிப்பட்ட மற்றும், திருஅவையின் கருத்துகளுக்காகவும், உலகின் அமைதிக்காவும் இறைவேண்டல் செய்யுமாறு, இப்புதன் மறைக்கல்வியுரையில் திருப்பயணிகளிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜெர்மன் மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்தியபோது இவ்வாறு கூறியத் திருத்தந்தை, பழங்கால, மற்றும், புதிய ஆயுதம் என போர்த்துக்கீசியர்கள் அழைக்கும் செபமாலையை தினமும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், எனது வலது முழங்காலில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக, உங்கள் மத்தியில் வரமுடியவில்லை, உட்கார்ந்துகொண்டே உங்களை வாழ்த்துவதற்கு மன்னிப்புக் கேட்கிறேன் என்றுரைத்த திருத்தந்தை, இந்த வலி விரைவில் குறையும், மற்றும், மற்றொரு புதன் மறைக்கல்வியுரை நிகழ்வில் உங்கள் மத்தியில் வர இயலும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்தார்.
நம்பிக்கை வயதானவர்களுக்கு மட்டும் உரியதல்ல
இப்புதன் மறைக்கல்வியுரையில், அன்புள்ள வயதுமுதிர்ந்த சகோதரர், சகோதரிகளே, வயதாகிவிட்டது என எண்ணவேண்டாம், நாம் எல்லாரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். இளையோர் நம்மை நோக்குகிறார்கள். நமது ஒத்திணங்கிய வாழ்வு, அவர்களுக்கு அழகான வாழ்வுப் பாதையைத் திறக்க முடியும் என்று கூறினார்.
கிறிஸ்தவ நம்பிக்கை, ஏதோ வயதானவர்களுக்கு மட்டும் உரியதல்ல என்றும் உரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவ நம்பிக்கையின் மதிப்பை வாழ்ந்துகாட்டுவதில் இறுதிவரை உறுதியாயிருங்கள் என்றும், அந்நம்பிக்கையை வாழ்ந்து காட்டுதல், பலவீனமல்ல, மாறாக அது நம் வலிமை என்றும், திருத்தந்தை வயதுமுதிர்ந்தோரிடம் கூறினார்..
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்