தேடுதல்

இத்தாலிய ஆயர் பேரவையின் புதிய தலைவர்  கர்தினால் Zuppi இத்தாலிய ஆயர் பேரவையின் புதிய தலைவர் கர்தினால் Zuppi  

இத்தாலிய ஆயர்களின் 76வது பொதுப் பேரவை

CEI எனப்படும் இத்தாலிய ஆயர் பேரவையின் புதிய தலைவராக, பொலோஞ்ஞா பேராயர் கர்தினால் Matteo Maria Zuppi அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவுசெய்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய கத்தோலிக்க ஆயர்களின் 76வது பொதுப் பேரவையை, மே 23, இத்திங்கள் மாலையில் ஆரம்பித்து வைத்தார் என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது..

திருஅவையின் ஒருங்கிணைந்த பயணத்தில் தங்களின் பங்கு என்ன என்பது குறித்து சிந்திப்பதற்காக இப்பொதுப் பேரவையில் கூடியிருக்கும் இத்தாலிய ஆயர்களை இத்திங்கள் மாலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து, ஏறத்தாழ இரண்டு மணி நேரம் தன் சிந்தனைகளை அவர்களோடு பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“இறைமக்களின் பகிர்வுகளுக்குச் செவிமடுத்தல்: தெளிந்துதேர்தல்: ஒருங்கிணைந்த பயணத்தில் முன்னுரிமைகள் கொடுக்கப்படவேண்டியவை?” என்ற தலைப்பில், உரோம் ஹில்டன் விமானநிலைய பயணியர் மாளிகையில் இப்பேரவை நடைபெறுகின்றது.

மேலும், CEI எனப்படும் இத்தாலிய ஆயர் பேரவையின் புதிய தலைவராக, பொலோஞ்ஞா பேராயர் கர்தினால் Matteo Maria Zuppi அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவுசெய்துள்ளார் என்று இச்செவ்வாயன்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 May 2022, 18:37