தேடுதல்

திருத்தந்தை பல்கேரியப் பிரதமர் Kiril Petkov சந்திப்பு திருத்தந்தை பல்கேரியப் பிரதமர் Kiril Petkov சந்திப்பு 

திருத்தந்தை, பல்கேரியா, வட மாசிடோனியா பிரதமர்கள் சந்திப்பு

தனது அதிகாரப்பூர்வ வெளியீடுகள், 2022ம் ஆண்டின் உலக அமைதி நாள் செய்தி, மனித உடன்பிறந்த உணர்வுநிலை ஏடு போன்றவற்றை, பல்கேரியா மற்றும். வட மாசிடோனியாவின் பிரதமர்களுக்குப் பரிசுகளாக அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

வட மாசிடோனியாவின் பிரதமர் Dimitar Kovachevski அவர்களும், பல்கேரியாவின் பிரதமர் Kiril Petkov அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மே 23, இத்திங்களன்று திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து உரையாடினர் என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

இச்சந்திப்புக்களின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை பதக்கம், தனது அதிகாரப்பூர்வ வெளியீடுகள், 2022ம் ஆண்டின் உலக அமைதி நாள் செய்தி, மனித உடன்பிறந்த உணர்வுநிலை ஏடு போன்றவற்றை, இவ்விரு நாடுகளின் பிரதமர்களுக்கும் பரிசுகளாக அளித்தார்.

அதேநேரம், திருத்தந்தையை ஏறத்தாழ முப்பது நிமிடங்கள் தனியே சந்தித்து உரையாடிய பல்கேரியப் பிரதமர் Kiril Petkov அவர்கள், சோஃபியாவில் பைசான்டைன்-ஸ்லாவிக் கத்தோலிக்க வழிபாட்டுமுறையோடு தொடர்புடைய கம்பளத்தால் தயாரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் குடில் ஒன்றையும், அந்நாட்டின் பாரம்பரிய Chiprovtsi விரிப்பு ஒன்றையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.

திருத்தந்தை வட மாசிடோனியா  பிரதமர்  Kovachevski சந்திப்பு
திருத்தந்தை வட மாசிடோனியா பிரதமர் Kovachevski சந்திப்பு

மேலும், திருத்தந்தையை ஏறத்தாழ இருபது நிமிடங்கள் தனியே சந்தித்து உரையாடிய வட மாசிடோனியாவின் பிரதமர் Dimitar Kovachevski அவர்கள், Ocrida கிளமென்ட்டின் புகழுரையின் ஒரு பகுதியின் நகல், Ocrida முத்தால் தயாரிக்கப்பட்ட செபமாலை, மாசிடோனியாவின் புகழ்பெற்ற கிட்டார் இசைக்கலைஞர் Vlatko Stefanovski அவர்களின் இசை ஆல்பம் போன்றவற்றை திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2022, 15:07