தேடுதல்

அறநெறி இறையியலாளர்கள் பன்னாட்டு கருத்தரங்கு அறநெறி இறையியலாளர்கள் பன்னாட்டு கருத்தரங்கு 

திருத்தந்தை: குடும்ப வாழ்வின் ஆன்மீகத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்

இல்லத் திருஅவையாக விளங்கும் குடும்பத்தில் தினசரி வாழ்வோடு செபமும், அன்பும் கலந்து இருந்தால், அந்நிலை குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கு உதவும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

குடும்பத்திலிருந்து ஊற்றெடுக்கும் வளமையான ஆன்மீகத்தில் ஊறித் திளைக்குமாறு, அறநெறி இறையியல் பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்குகொண்ட 160 பிரதிநிதிகளிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகமும், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் இறையியல் நிறுவனமும் இணைந்து நடத்துகின்ற நான்கு நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை, மே 13, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

குடும்ப வாழ்வின் அனுபவத்தில் நுழைவது, அறநெறி இறையியலாளர்கள், தங்களின் படிப்பு, மற்றும், உலகளாவியத் திருஅவை  பற்றிய அறிவை வளர்ப்பதற்கு நல்லதொரு வாய்ப்பாகும் என்றுரைத்த திருத்தந்தை, இல்லத் திருஅவையாக விளங்கும் குடும்பத்தில் தினசரி வாழ்வோடு செபமும், அன்பும் கலந்து இருந்தால், அந்நிலை குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கு உதவும் என்று எடுத்துரைத்தார்.

குடும்பங்கள், பிரச்சனைகள்

வேகமாக மாறிவரும் இக்காலத்தில் குடியிருப்பு வசதியின்மை, அமைதியான சூழலில் வாழமுடியாத நிலை போன்ற கடும் நெருக்கடிகளை உலக அளவில் குடும்பங்கள் எதிர்கொள்கின்றன, கிறிஸ்தவ வாழ்வின் இந்த அம்சத்தை அறநெறி இறையியலாளர்கள் கருத்தில் இருத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களுக்கென்று குடும்பங்களை அமைத்துக்கொள்வதற்கு இளையோர் ஏராளமான  பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்று கூறினார்.

அறநெறி இறையியலாளர்கள், இச்சவால்களை எதிர்கொள்ளும் குடுபம்பங்கள், அவற்றைக் களைவதற்குரிய ஒரு புதிய படைப்பாற்றலை, அவைகள் புரியும் மொழியில் அவர்களிடம் பேசவேண்டும் எனவும், திருஅவையில் மாற்றம் பெறுவதற்கு குடும்பங்கள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கின்றன எனவும் திருத்தந்தை கூறினார்.

ஒருங்கிணைந்த திருஅவை, இறைமக்களோடு, குறிப்பாக, கிறிஸ்தவ வாழ்வுக்கு மையமாக, குடும்பத்தோடு உரையாடலை மேற்கொண்டு வருகிறது, மேய்ப்புப்பணியில் இக்குடும்பங்கள் மீது காட்டப்படும் ஆற்றப்படும் ஒருவர் ஒருவருக்கு ஆதரவாக அமைந்துள்ளது எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

மே 11, இப்புதனன்று தொடங்கிய இக்கருத்தரங்கு, 14, இச்சனிக்கிழமையன்று நிறைவடைகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 மே 2022, 16:35