உக்ரேனியர்களுக்கு பேருதவி செய்கின்ற போலந்து ஆயர்களுக்கு நன்றி
மேரி தெரேசா: வத்திக்கான்
தவக்காலம், மனமாற்றத்திற்கும், மனத்தின் போக்கை மாற்றுவதற்கும் அழைப்புவிடுக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 29, இச்செவ்வாயன்று, தவக்காலம் (#Lent) என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மனத்தின் போக்கை மாற்றுவதன் வழியாக, வாழ்வின் உண்மையும், அழகும் பொருள்களைக் கொண்டிருப்பதிலும், சேமித்துவைப்பதிலும் அல்ல, மாறாக கொடுப்பதிலும், நன்மைத்தனத்தைப் பகிர்ந்துகொள்வதிலும் இருக்கின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.
போலந்து ஆயர்களுக்கு நன்றி
மேலும், கடுமையான போர் இடம்பெற்றுவரும் உக்ரைன் நாட்டிலிருந்து புலம்பெயரும் மக்களுக்கு, உதவி வருகின்ற போலந்து ஆயர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
மார்ச் 28, இத்திங்களன்று, போலந்து ஆயர் பேரவைத் தலைவரான பேராயர் Stanislaw Gądecki அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் தனியே சந்தித்து ஏறத்தாழ 45 நிமிடங்கள் உரையாடியபோது, உக்ரைனில் தொடர்ந்து போர் இடம்பெற்றுவரும் சூழலில் போலந்து திருஅவை செயல்படும் முறைகளை விளக்கினார்.
உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து போலந்து நாடு, இதுவரை ஏறத்தாழ 23 இலட்சம் உக்ரேனியர்களை வரவேற்று ஆதரவளித்து வருகிறது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்