இத்தாலிய கர்தினால் Luigi De Magistris இறைவனடிச் சேர்ந்தார்.
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிப்ரவரி 16, புதன்கிழமையன்று இத்தாலிய கர்தினால் Luigi De Magistris அவர்கள் இறைவனடிச் சேர்ந்ததையொட்டி, தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 16, புதன்கிழமையன்று காலை 1.00 மணியளவில் 96 வயது நிரம்பிய இத்தாலிய கர்தினால் Luigi De Magistris அவர்கள் இறைவனடிச் சேர்ந்தார் என்றும், அவர் தனது அடுத்த பிறந்த நாளை வரும் 23ம் தேதி கொண்டாடவிருந்தார் என்றும் திருப்பீடம் அறிவித்துள்ளது.
Cagliari என்னும் இடத்தில் 1926ம் ஆண்டு பிறந்த இவர், Cagliari பல்கலைக்கழகத்தில் தனது தத்துவவியல் படிப்பை முடித்து உரோமன் குருமடத்தில் தனது குருத்துவப் பயிற்சியை முடித்தார்.
Cagliariன் பேராலயத்தில் 1952ம் ஆண்டு, ஏப்ரல் 12ம் தேதியன்று பேராயர் Paolo Botto அவர்களால் குருவாக அருள்பொழிவுப் பெற்றார்.
திருத்தந்தையின் பணிகளில் இவர் தனது பெரும்பாலான ஆண்டுகளை செலவிட்டார் என்றும், 1996ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் ஆயராகத் தேர்வு செய்யப்பட்டு அதே ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி Cagliariல் உள்ள Sant'Anna ஆலயத்தில் கர்தினால் Giovanni Canestri அவர்களால் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார் என்றும், 2015ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் இவரை கர்தினாலாக உயர்த்தினார் என்றும் திருப்பீடச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்