திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருவனந்தபுரம் இலத்தீன் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் மரிய கலிஸ்ட் சூசை பாக்கியத்தின் நிர்வாகப் பொறுப்பு ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே மறைமாவட்டத்தின் அருள்பணி Thomas Jessayyan Netto அவர்களைப் புதிய பேராயராக நியமித்துள்ளார்.
புதியதுற என்னுமிடத்தில் 1964ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி பிறந்த புதிய பேராயர் Thomas Jessayyan அவர்கள், ஆல்வே புனித யோசேப்பு பாப்பிறைக் குருமடத்திலும், திருவனந்தபுரம் புனித லொயோலா கல்லூரியிலும், உரோம் உர்பான் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்.
1989ம் ஆண்டு அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், பங்குதள பொறுப்பாளராகவும், மதங்களுக்கிடையேயான கலந்துரையாடல் அவையின் செயலராகவும், திருவனந்தபுரம் புனித வின்சென்ட் இளங்குருமட அதிபர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
தற்போது பணிஓய்வு பெறும் பேராயர் சூசை பாக்கியம் அவர்கள், 1946ம் ஆண்டு, மார்ச் 11ம் தேதி மார்த்தாண்டதுறையில் பிறந்தவர் ஆவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்