காசாகிஸ்தானில் போராடி உயிரிழந்தவர் குறித்து திருத்தந்தை அனுதாபம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
முன்னாள் சோவியத் குடியரசான kazakhstanல், அரசுக்கு எதிரானப் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 9ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கி, அவர்களோடு மூவேளை செபத்தைச் செபித்தபின், காசாகிஸ்தானில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராகப் போராடிய மக்கள் உயிரிழந்தது குறித்து தன் ஆழந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்போராட்டத்தில் உயிரிழந்த மக்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் செபிப்பதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாட்டில் பேச்சுவார்த்தைகள், மற்றும் நீதியின் வழியாக சமூக இணக்கவாழ்வு கண்டுகொள்ளப்படும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
காசாகிஸ்தான் நாட்டில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராகவும், அந்நாட்டில் 30 ஆண்டுகள் ஆடசிபுரிந்தபின்னரும், அரசில் இன்றும் தன் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் முன்னாள் அரசுத்தலைவர் Nursultan Nazarbayev அவர்களுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட போராட்டத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக காசாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
4000க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்