தேடுதல்

2020 ஜனவரி 20ம் தேதியின் திருமுழுக்குத் திருப்பலி 2020 ஜனவரி 20ம் தேதியின் திருமுழுக்குத் திருப்பலி  

வத்திக்கான் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு

திருத்தந்தை அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவன்று ஒரு பங்குத் தந்தைக்குரிய பொறுப்பை ஏற்று குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கி வருகிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவான இஞ்ஞாயிறு, வத்திக்கானில் பணிபுரியும் தொழிலாளர்களின் 16 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1981ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் துவக்கப்பட்டு, 40ம் ஆண்டைக் கண்டுவரும் இந்நிகழ்வு, ஜனவரி 9, ஞாயிறன்று வத்திக்கானின், சிஸ்டைன் கோவிலில் இடம்பெறும்.

ஓவியர் மைக்கல் ஆஞ்சலோவின் புகழ் வாய்ந்த ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட மேற்பகுதியைக் கொண்ட சிஸ்டைன் கோவிலில்தான் திருத்தந்தையின் தேர்தலும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில உலகத் திருஅவையின் இவ்வுலகத் தலைவராகவும், உரோம் மறைமாவட்ட ஆயராகவும் செயல்படும் திருத்தந்தை அவர்கள், ஒவ்வோர் ஆண்டும், இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவன்று, ஒரு பங்குத் தந்தைக்குரிய பொறுப்பை ஏற்று குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கி வருகிறார்.

திருத்தந்தையர் தேர்வும், குழந்தைகளின் திருமுழுக்கும் இடம்பெறும் Sistine கோவில், வத்திக்கான் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 50 இலட்சம் பயணிகள் பார்வையிடும் இடமாகும்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2022, 15:56