தேடுதல்

திருவருகைக்கால தயாரிப்பு திருவருகைக்கால தயாரிப்பு  

ஆற்றும் பணிகளே நம் வாழ்விற்கு அர்த்தத்தைக் கொடுக்கின்றன

இக்காலத்தில் நாம் விழிப்புடனும், இறைவேண்டலில் உறுதியுடனும், நற்செய்தி மீது ஆர்வத்துடனும் செயல்பட இயேசு அழைப்பு விடுக்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் மற்றவர்களுக்கு ஆற்றும் பணிகளே நம் வாழ்விற்கு அர்த்தத்தைக் கொடுக்கின்றன என்ற கருத்தை மையமாக வைத்து, நவம்பர் 29, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'நம் திறமைகள் நல்ல கனி தரவும், நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கவும் உதவுவது, நாம் பிறருக்கு ஆற்றும் பணிகளே. பணிபுரிவதற்காக வாழாதவர்கள், இவ்வுலக வாழ்வை முழுமையாக வாழாதவர்கள்' என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மேலும், இஞ்ஞாயிற்றுக்கிழமையன்று, ஐந்து டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் இறைமகன் இயேசு, நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற நம் நம்பிக்கையை மேலும்  உறுதிப்படுத்த இத்திருவருகைக்காலம் உதவுவதாக, எனவும், இரண்டாவது டுவிட்டரில்,  இக்காலத்தில் நாம் விழிப்புடனும், இறைவேண்டலில் உறுதியுடனும், நற்செய்தி மீது ஆர்வத்துடனும் செயல்பட இயேசு அழைப்பு விடுக்கிறார் எனவும் எழுதியுள்ளார்.

ஞாயிறன்று வெளியிட்ட ஏனைய மூன்று டுவிட்டர் செய்திகளில்,  இன்றைய காலத்தில், புலம்பெயரும் எண்ணற்ற மக்கள், நம் எல்லைகளில் மரணமடைவது, அவர்கள் ஆப்ரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு அடிமை நிலைக்குத் தள்ளப்படுவது, போன்றவைகளை குறிப்பிட்டு, அவர்கள் நடுவே உழைப்பவர்களுக்கு நன்றியை வெளியிட்டதுடன், அவர்களுக்கான செபத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2021, 14:37