தேடுதல்

திருத்தந்தை, அயர்லாந்து அரசுத்தலைவர் Higgins சந்திப்பு திருத்தந்தை, அயர்லாந்து அரசுத்தலைவர் Higgins சந்திப்பு  

திருத்தந்தை, அயர்லாந்து அரசுத்தலைவர் Higgins சந்திப்பு

அயர்லாந்து நாட்டின், பாரம்பரிய மேய்ப்பர்கள் கோல் ஒன்றை, அரசுத்தலைவர் Higgins அவர்கள், திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அயர்லாந்து நாட்டு அரசுத்தலைவர் Michael D. Higgins அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, செப்டம்பர் 17, இவ்வெள்ளி காலையில் திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்தார், அயர்லாந்து அரசுத்தலைவர் Higgins.

அயர்லாந்து நாட்டுப் பகுதி, மற்றும், பன்னாட்டளவில் இடம்பெறும் விவகாரங்கள் பற்றிய கருத்துப்பரிமாற்றங்களில், புலம்பெயர்ந்தோர், கிளாஸ்கோவில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் பற்றிய உலக உச்சி மாநாடு (COP26),   கோவிட்-19 பெருந்தொற்று, ஐரோப்பாவின் வருங்காலம், அயர்லாந்தில் இடம்பெறும் அமைதி நடவடிக்கைகள் போன்றவை, இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்தது.

அயர்லாந்து நாட்டின் பாரம்பரிய மேய்ப்பர்கள் கோல் ஒன்றை அரசுத்தலைவர் Higgins அவர்கள், திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார். திருத்தந்தையும், தன் திருமடல்கள், உலக அமைதி நாள் செய்தி, விதைப்பவரைக் குறிக்கும் கலைவண்ணப் படம் ஆகியவற்றை, அவருக்குப் பரிசாக அளித்தார்.  

மேலும், இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Gualtiero Bassetti அவர்களையும், பெரு நாட்டு திருப்பீட தூதர் பேராயர் Nicola Girasoli அவர்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, செப்டம்பர் 17, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2021, 15:10