பேராயர் ஜிரெல்லி அவர்களுக்கு வரவேற்பு பேராயர் ஜிரெல்லி அவர்களுக்கு வரவேற்பு 

பேராயர் ஜிரெல்லி, நேபாள திருப்பீடத் தூதராகவும் நியமனம்

பேராயர் ஜிரெல்லி அவர்கள், 2017ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியிலிருந்து, இஸ்ரேல் மற்றும், சைப்ரசின் திருப்பீடத் தூதராகவும், எருசலேம் மற்றும், பாலஸ்தீனாவின் திருத்தூதுப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவுக்கு திருப்பீடத் தூதராகப் பணியாற்றும் பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி அவர்களை, நேபாளத்திற்கும் திருப்பீடத் தூதராக, செப்டம்பர் 13, இத்திங்களன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

பேராயர் ஜிரெல்லி

1953ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, இத்தாலியின் பெர்கமோ மாவட்டத்தில் Predore எனும் நகரில் பிறந்த பேராயர் ஜிரெல்லி அவர்கள், 1978ம் ஆண்டில் பெர்கமோ மறைமாவட்டத்திற்கென அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

1987ம் ஆண்டில் திருப்பீடத்தின் தூதரகப் பணிகளில் பணியாற்றத் தொடங்கிய பேராயர் ஜிரெல்லி அவர்கள், 2006ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால், இந்தோனேசியாவிற்கும், பின்னர், அதே ஆண்டில் East Timorக்கும் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டார்.

இவர், 2011ம் ஆண்டில், சிங்கப்பூர் நாட்டிற்கு, திருப்பீடத் தூதராகவும், மலேசியா, புரூனெய்,  வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு, திருப்பீடப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார். 1975ம் ஆண்டில் வியட்நாமிலிருந்து திருப்பீடப் பிரதிநிதி வெளியேற்றப்பட்டபின், அந்நாட்டிற்கு முதன்முறையாக நியமிக்கப்பட்ட பேராயர் ஜிரெல்லி அவர்கள், 2011ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி, தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பிற்குத் (ASEAN) திருப்பீடத் தூதராகவும் நியமிக்கப்பட்டார். பேராயர் ஜிரெல்லி அவர்கள், 2017ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியிலிருந்து, இஸ்ரேல் மற்றும், சைப்ரசின் திருப்பீடத் தூதராகவும், எருசலேம் மற்றும், பாலஸ்தீனாவின் திருத்தூதுப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2021, 14:48