திருத்தந்தை பிரான்சிஸ், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் David Sassoli   திருத்தந்தை பிரான்சிஸ், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் David Sassoli  

திருத்தந்தை, ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் சந்திப்பு

புனித ஒடிலியா, 1884ம் ஆண்டில், பவேரியாவில், “பார்வையிழந்தோருக்கு ஒளி” என்ற விருதுவாக்கோடு, புனித ஒடிலியாவின் பெனடிக்ட் துறவு சபையை தோற்றுவித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அனைவர்மீதும், அக்கறை, மற்றும், பரிவன்பு கொண்டிருப்பதன் வழியாக, கிறிஸ்தவர்கள், உண்மையாகவே கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் என்று கூறமுடியும் என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 26, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை எழுதியுள்ளார்.

“கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்சென்று, எல்லார் மீதும் அக்கறை, மற்றும், இரக்கம் காட்டும் அன்புநெறி, நமது நம்பிக்கை மற்றும், எதிர்நோக்கின் மிகச் சிறந்த வெளிப்பாடாகும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

David Sassoli சந்திப்பு

மேலும், ஜூன் 26, இச்சனிக்கிழமை காலையில், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் David Sassoli அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

புனித ஒடிலியா

இன்னும், பிரான்ஸ் நாட்டின் Alsaceன் பாதுகாவலராகிய புனித ஒடிலியா இறைபதம் சேர்ந்ததன் 1,300ம் ஆண்டு நிறைவு நிகழ்வில், தனது பிரதிநிதியாக கலந்துகொள்ளுமாறு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களை, ஜூன் 26, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித ஒடிலியா, 1884ம் ஆண்டில், பவேரியாவில், புனித ஒடிலியாவின் பெனடிக்ட் துறவு சபையை தோற்றுவித்தார். பார்வையிழந்தோருக்கு ஒளி (lumen caecis) என்ற விருதுவாக்கோடு இச்சபையை உருவாக்கிய இப்புனிதர், 1807ம் ஆண்டில், திருத்தந்தை 7ம் பயஸ் அவர்களால், Alsaceன் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார். புனித ஒடிலியா கி.பி. 662ம் ஆண்டில் பிறந்து 720ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2021, 15:03