திருத்தந்தை பிரான்சிஸ், “பிறப்பின் பொதுவான நிலைமைகள்” கூட்டத்தில் உரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ், “பிறப்பின் பொதுவான நிலைமைகள்” கூட்டத்தில் உரையாற்றுகிறார் 

வாழ்வை வரவேற்காத சமுதாயம், வாழ்வதையே நிறுத்திவிடும்

இத்தாலி, 1861ம் ஆண்டில், ஒரு நாடாக ஒன்றிணைக்கப்பட்டபின், கடந்த 2020ம் ஆண்டில் அந்நாட்டில் பிறப்பு விகிதம் மிகக்குறைவாக இருந்தது. இந்நிலைக்கு, கோவிட்-19 பெருந்தொற்று காரணம் அல்ல

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலியில் மக்கள் தொகை குறைந்து வருவதால் ஏற்படவிருக்கும் ஆபத்துக்கள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடப்பட்டுவரும்வேளை, இளையோர் இத்தாலியில் தங்கி, குடும்பங்கள் அமைப்பதற்கு, அரசு கொள்கைகளை உருவாக்கி, ஊக்கப்படுத்துமாறு,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

மே 14, இவ்வெள்ளி காலையில், வத்திக்கானுக்கு அருகிலுள்ள Conciliazione அரங்கில், “பிறப்பின் பொதுவான நிலைமைகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருமைப்பாட்டுணர்வின் முக்கியத்துவம், குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்துதல், குடும்பத்தைப் பாதுகாத்தல், தலைமுறைகளின் நீடித்த நிலையானதன்மை ஆகியவை பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இத்தாலியில் மக்கள்தொகை குறைவால் உருவாகியுள்ள நெருக்கடிகள் பற்றியும், கோவிட்-19 பெருந்தொற்றால் குடும்பங்களில் அதிகரித்திருக்கும் வறுமைநிலை பற்றியும் ஆய்வுசெய்யும் நோக்கத்தில், “குடும்பத்திற்காகக் கழகங்கள்” என்ற அமைப்பு இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் இத்தாலிய பிரதமர் Mario Draghi அவர்கள் உள்ளிட்ட, உயர்மட்ட அரசு அதிகாரிகள், மற்றும், வல்லுனர்கள் கலந்துகொண்டனர்.

இந்த அமைப்பின் இந்த முயற்சிக்கு, தன் பாராட்டுதல்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியில், மனித வாழ்வு மற்றும், மனிதரின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என்று கூறியதோடு, இத்தாலியின் மக்கள்தொகை நிலவரம் குறித்தும் எடுத்துரைத்தார்.

  “பிறப்பின் பொதுவான நிலைமைகள்”  கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்
“பிறப்பின் பொதுவான நிலைமைகள்” கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

குறைவான பிறப்பு விகிதம்

குடும்பங்கள் அமைத்து, குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு இளையோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் குறிப்பிட்ட திருத்தந்தை, அதிகமான இளையோர் குழந்தைகளைக் கொண்டிருக்க விரும்புகின்றனர், ஆனால், வாழ்வு பற்றிய அவர்களின் கனவுகள், இருளடைந்து உள்ளன, இளையோரில் பாதிப்பேரே, தங்களின் வாழ்நாளில் இரு குழந்தைகளைக் கொண்டிருக்க முடிகின்றது என்று கூறினார்.

ஐரோப்பாவில் குறைவான பிறப்பு விகிதத்தைக் கொண்டிருக்கும் சில நாடுகளில் இத்தாலியும் ஒன்று எனவும், இது, அந்நாட்டை, வயதுமுதிர்ந்த நாடாக மாற்றுகிறது எனவும், இந்த முதுமைநிலைக்கு, இத்தாலியில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பே தவிர, அதன் வரலாறு காரணமல்ல எனவும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

இத்தாலி, ஒரு நாடாக ஒன்றிணைக்கப்பட்டபின், கடந்த 2020ம் ஆண்டில் அந்நாட்டில் பிறப்பு விகிதம் மிகக்குறைவாக இருந்தது என்றும், இந்நிலை, கோவிட்-19 பெருந்தொற்றால் அல்ல, மாறாக, அந்நாட்டில் பிறப்பு விகிதம், தொடர்ந்து குறைந்துவருவதே காரணம் என்றும், உரையாற்றிய திருத்தந்தை, இதற்கு, குடும்பங்கள், குறிப்பாக, தங்களின் வாழ்வுத் திட்டங்கள் குறித்து கவலைப்படும், இளம் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றும் கூறினார்

தொழிலில் பாதுகாப்பின்மை, பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்கு செலவினம் அதிகரிப்பு, குடும்பங்களைப் பாதுகாப்பதற்கென அதிகநேரம் வேலை செய்வது, குடும்பத்தைப் பராமரிக்க, பெற்றோர், மற்றும், தாத்தா பாட்டிகளின் பங்கு, வேலைக்குச் செல்லும் பெண்கள், கருவுறுதல், மற்றும், பிள்ளைகளைப் பெற்றெடுப்பதில் எதிர்கொள்ளும் ஊக்கமற்ற சொற்கள் போன்றவற்றைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்களின் இந்நிலையை எண்ணி சமுதாயம் வெட்கப்படவேண்டும் என்று கூறினார்.

“பிறப்பின் பொதுவான நிலைமைகள்”  கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்
“பிறப்பின் பொதுவான நிலைமைகள்” கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

கொடை

நிகழ்காலத்தில் குடும்பம் மையமாக அமைக்கப்படாவிட்டால், வருங்காலமே கிடையாது. மாறாக, குடும்பம் மீண்டும் உருவானால், அனைத்தும் மீண்டும் அமையும் என்றுரைத்த திருத்தந்தை, மக்கள் தொகை குறைவு குறித்த, தன் மூன்று சிந்தனைகளை முன்வைத்தார்.

ஒவ்வொரு கொடையும் பெறுவதாகும், மற்றும், ஒவ்வொருவரும் பெறுகின்ற முதல் கொடை வாழ்வு என்றும், நாம் எல்லாரும் பெற்றுள்ள இந்தக் கொடையை தொடர்ந்து அடுத்தவருக்கு வழங்கவேண்டும் என்றும், ஒவ்வொருவருக்கும் முதலில் வரவேண்டிய மிகப்பெரும் கொடை, குழந்தை என்றும், திருத்தந்தை எடுத்துரைத்தார்.

1861ம் ஆண்டில், இத்தாலி ஒரு நாடாக ஒன்றிணைக்கப்பட்டபின் கடந்த ஆண்டில் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்திருந்தது.

திருத்தந்தை பிரான்சிஸ்,  இத்தாலிய பிரதமர் Mario Draghi
திருத்தந்தை பிரான்சிஸ், இத்தாலிய பிரதமர் Mario Draghi

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 May 2021, 15:32