திருத்தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் ஈராக் திருத்தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் ஈராக் 

திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயண நிகழ்வுகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 5ம் தேதி முதல், 8ம் தேதி முடிய, ஈராக்கில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத் திட்டங்கள் பற்றிய விவரங்களை திருப்பீடம் வெளியிட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“ஒப்புரவு அருளடையாளத்தின் மையம் இயேசுவே, இவர், நமக்காகக் காத்திருக்கிறார், நமக்குச் செவிசாய்க்கிறார், மற்றும், நம்மை மன்னிக்கிறார்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 02, இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய பக்திமுயற்சிகள் பற்றி, தன் வலைத்தள பக்கத்தில் பதிவுசெய்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று, ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவம் பற்றி, தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

ஈராக் திருத்தூதுப் பயணம்

மேலும், இம்மாதம் 5ம் தேதி முதல், 8ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத் திட்டங்கள் பற்றிய விவரங்களை, மார்ச் 02, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது, திருப்பீடம்.

மார்ச் 05, வருகிற வெள்ளி, உரோம் நேரம் காலை 7.30 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் பகல் 12 மணிக்கு, உரோம் ஃபியுமிச்சினோ பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, ஈராக் தலைநகர் பாக்தாத்தை, உள்ளூர் நேரம் பிற்பகல் 2 மணிக்குச் சென்றடைவார்.

பாக்தாத் பன்னாட்டு விமானத்தளத்தில் இடம்பெறும் வரவேற்பு நிகழ்விற்குப்பின், அந்நிலையத்தின் முக்கிய விருந்தினர் அறையில், பிரதமரை, தனியே சந்தித்துப் பேசும் திருத்தந்தை, பாக்தாத் அரசுத்தலைவர் மாளிகையில், அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வார். அதற்குப்பின், அதே மாளிகையில், அரசுத்தலைவரை தனியே சந்தித்துப் பேசுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.   

அன்று மாலை பாக்தாத், அரசுத்தலைவர் மாளிகையில், அரசு அதிகாரிகள், பொது மக்கள் பிரதிநிதிகள், மற்றும், தூதரக அதிகாரிகளைச் சந்தித்து உரையாற்றும் திருத்தந்தை, பாக்தாத் நகரிலுள்ள மீட்பரின் அன்னை மரியா சீரோ-கத்தோலிக்க ஆலயத்தில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள் மற்றும், வேதியர்களைச் சந்தித்து உரையாற்றுவார். 

மார்ச் 06 சனிக்கிழமையன்று நஜாப், நசிரியா, மற்றும், ஊர் சமவெளியிலும்,  மார்ச் 07, ஞாயிறன்று, பாக்தாத், எர்பில், கரகோஷ் ஆகிய நகரங்களிலும், நிகழ்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 08, திங்கள் காலையில், பாக்தாத் நகரிலிருந்து உரோம் நகருக்குப் புறப்படுவார். அன்று உரோம் நேரம் மதியம் 12.55 மணிக்கு உரோம் சம்ப்பினோ விமானநிலையம் வந்துசேர்வார். இத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ஈராக் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வரும்.

  • மார்ச் 06, சனிக்கிழமை
  • 7.45 - பாக்தாத் நகரிலிருந்து Najaf நகருக்கு விமானப் பயணம்.
  • 8.30  - Najaf விமானத்தளம் சென்றடைதல்
  • 9.00 – Najafல் AYATOLLAH SAYYID ALI AL-HUSAYNI AL-SISTANI அவர்களுடன் சந்திப்பு
  • 10.00 - Najafலிருந்து    Nassiriyaவுக்கு விமானப் பயணம்   
  • 10.50 - Nassiriya விமானத்தளம் சென்றடைதல்
  • 11:10 - Ur சமவெளியில் பல்சமய கூட்டம்
  • 12.30 – பாக்தாத்திற்கு விமானப் பயணம்
  • பிற்பகல் 01.20 -  பாக்தாத் சென்றடைதல்           
  • மாலை 6 மணி -  பாக்தாத் புனித யோசேப்பு கல்தேய வழிபாட்டுமுறை பேராலயத்தில் திருப்பலி
  • மார்ச் 07, ஞாயிறு – பாக்தாத், எர்பில், கரகோஷ், பாக்தாத்
  • 07:15  -  எர்பில் நகருக்கு விமானப் பயணம்   
  • 08:20  - எர்பில் விமானத்தளத்தில் ஈராக்கின் குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதி அரசுத்தலைவரின் வரவேற்பு, மற்றும், சமய, அரசு அதிகாரிகள் சந்திப்பு
  • 8.30 - எர்பில் விமானத்தள விருந்தினர் அறையில், குர்திஸ்தான் அரசுத்தலைவர், பிரதமர் சந்திப்பு
  • 09:00  - மொசூல் நகருக்கு ஹெலிகாப்டரில் பயணம்.
  • அந்நகரில், போரில் பலியானவர்களுக்காக இறைவேண்டல்
  • 10:55  - மொசூலிலிருந்து கரகோஷ் நகருக்கு ஹெலிகாப்டரில் பயணம்.
  • கரகோஷ் அமல மரி ஆலயத்தில் விசுவாசிகளுக்கு உரை, மூவேளை செப உரை
  • 12.15 -  கரகோஷிலிருந்து எர்பிலுக்குப் பயணம்
  • மாலை 4 மணிக்கு எர்பில் நகரின் “Franso Hariri” அரங்கில் திருப்பலி
  • மாலை 6.10 மணிக்கு பாக்தாத்திற்குப் புறப்படுதல்
  • மார்ச் 08, திங்கள்        
  • 9.20  - பாக்தாத் பன்னாட்டு விமானத்தளத்தில் பிரியாவிடை
  • 12.55 உரோம் வந்தடைதல்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2021, 14:58