வத்திக்கான் நீதித்துறை அலுவலகம் வத்திக்கான் நீதித்துறை அலுவலகம் 

வத்திக்கானின் குற்றவியல் சட்டத் தொகுப்பில் மாற்றங்கள்

குற்றம் சுமத்தப்பட்டவர், தன் குற்றத்திற்காக மனம்வருந்தும் முறையில் நடந்துகொள்வது, மறுவாழ்வுத் திட்டத்தில் பயனுள்ள முறையில் பங்கெடுக்க முன்வருதல் போன்றவற்றில் முன்னேற்றம் காண்பித்தால், அவரது தண்டனை காலம் குறைக்கப்படும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் நாட்டின் குற்றவியல் சட்டத்தொகுப்பில், காலங்களின் மாறிவரும் உணர்வுகளுக்கு ஏற்ப, சில மாற்றங்களை, தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் motu proprio அறிக்கையின் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 16, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார்,

“நீதி சார்ந்தவற்றில் மாற்றங்களை அறிமுகப்படுத்தல் (Recante modifiche in materia di giustizia)” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தையின் motu proprio அறிக்கையில்,  குற்றவாளியின் நன்னடத்தை, தன்னார்வல, மற்றும், பொதுநலப் பணிக்கு அர்ப்பணிப்பதில் ஆர்வம் காட்டல் ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனை காலம் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டவர், தன் குற்றத்திற்காக மனம்வருந்தும் முறையில் நடந்துகொள்வது,  மறுவாழ்வுத் திட்டத்தில் பயனுள்ள முறையில் பங்கெடுக்க முன்வருதல் போன்றவற்றில் முன்னேற்றம் காண்பித்தால், அவருக்கு அனுபவித்துவரும் தண்டனை காலத்தில், ஒவ்வோர் ஆண்டும் 45 முதல் 120 நாள்கள் வரை குறைக்கப்படும் என்று, இந்த அறிக்கையின் முதல் எண் கூறுகிறது. 

குற்றம்சுமத்தப்பட்டவர், நியாயமான காரணங்களின்றி, வழக்குவிசாரணையில் பங்குகொள்ள மறுக்கும்பட்சத்தில், அவர் தன்னை தற்காத்துக்கொள்வதற்கு அவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதன் அடிப்படையில், அந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும். அதேநேரம், குற்றம்சாட்டப்பட்டவர், நியாயமான மற்றும், நம்பத்தகுந்த  காரணங்களுக்காக, விசாரணைக்கு வரவில்லை மற்றும், அவரால் வரமுடியவில்லை, எடுத்துக்காட்டாக, அவரது மனநிலை சரியில்லை என்ற நிலையில், நீதிமன்றமோ அல்லது, ஓர் அலுவலகமோ அந்த விசாரணையை தற்காலிகமாக நிறுத்திவைக்கவேண்டும்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2021, 15:24