தேடுதல்

Vatican News
இந்தோனேசிய விமான விபத்திலிருந்து மீட்கப்படும் பகுதிகள் இந்தோனேசிய விமான விபத்திலிருந்து மீட்கப்படும் பகுதிகள்   (ANSA)

இந்தோனேசிய நிலநடுக்கம், விமான விபத்து குறித்து கவலை

ஏற்கனவே, இந்தோனேசியாவிற்கு தன் அனுதாப இரங்கல் தந்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, மூவேளை செபவுரைக்குப் பின்னும் அது குறித்துப் பேசினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியாவில் அண்மையில் இடம்பெற்ற நிலநடுக்கம், மற்றும், விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் நூலக அறையிலிருந்து வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் இவை பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தோனேசியாவின் Sulawesi தீவில் இடம்பெற்ற  இந்த கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள், காயமுற்றவர்கள், மற்றும், வேலைகளை இழந்தவர்களுக்காக தான் செபிப்பதாக எடுத்துரைத்தார்.

இம்மாதம் 9ம் தேதி, இந்தோனேசியாவின் ஜாவா கடலில் 62 பேருடன் விமானம் விபத்துக்குள்ளாகியது குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தோனேசியாவில் இம்மாதம் 15ம் தேதி இடம்பெற்ற மிக சக்தி வாய்ந்த நில நிலநடுக்கத்தால், குறைந்தது, 78 பேர் இறந்திருக்கலாம் எனவும், 826 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அனுதாபங்களை வெளியிட்டு அந்நாட்டிற்கு கடந்த வெள்ளியன்றே இரங்கல் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

17 January 2021, 12:52