திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்த, சுலோவாக்கியா அரசுத் தலைவர்  Zuzana Caputova திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்த, சுலோவாக்கியா அரசுத் தலைவர் Zuzana Caputova 

திருத்தந்தையுடன் சுலோவாக்கியா குடியரசுத் தலைவர் சந்திப்பு

சுலோவாக்கியா நாட்டில் கத்தோலிக்க திருஅவை ஆற்றிவரும் சிறப்புப் பங்களிப்பு, குறிப்பாக, கல்வித்துறையில் ஆற்றிவரும் பங்களிப்பு குறித்து வத்திக்கான் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுலோவாக்கியா நாட்டின் குடியரசுத் தலைவர் Zuzana Čaputová அவர்கள், டிசம்பர் 14, இத்திங்களன்று காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

சுலோவாக்கியா தலத்திருஅவை, மற்றும், இன்றைய உலகச்சூழல்கள் குறித்து திருத்தந்தையுடன் பேசியபின், திருப்பீடத்தின் வெளியுறவுத்துறைச் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார், அரசுத்தலைவர் Zuzana Čaputová.

பேராயர் காலகர் அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, சுலோவாக்கியா நாட்டில் கத்தோலிக்க திருஅவை ஆற்றிவரும் சிறப்புப் பங்களிப்பு, குறிப்பாக, கல்வித்துறையில்  ஆற்றிவரும் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள பாதிப்பு, இயற்கையைப் பாதுகாப்பதில் ஒன்றிணைந்து உழைக்கவேண்டியதன் அவசியம், சமுதாய நீதி, பன்னாட்டு அமைதி, ஐரோப்பிய வருங்காலம் போன்றவை குறித்த கருத்துப் பரிமாற்றங்கள், இச்சந்திப்புகளில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2020, 14:51