திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளை வெளியிடும் @Pontifex வலைத்தளம் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளை வெளியிடும் @Pontifex வலைத்தளம் 

கொலையாளி கூட, தன் மனித மாண்பை இழப்பதில்லை

கடவுள் நம் வரலாற்றில் குடியிருப்பதுடன், வரலாற்றின் இறுதி நோக்கமாக இருக்கும் இயேசு கிறிஸ்துவை நோக்கி வழிநடத்திச் செல்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடவுளின் நெருக்கத்தை நினைவுகூரும் காலம் திருவருகைக்காலம் என்ற கருத்துடன் நவம்பர் 30, இத்திங்களன்று, தன்  டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'கடவுள் நம்மை நோக்கி கீழே இறங்கிவந்தார், அவர் நம் அருகிலிருக்கிறார் என்பதை நினைவுகூரும் காலம் திருவருகைக்காலம்' என்கிறது திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டரில், மரணதண்டனைகளுக்கு எதிரான தன் கருத்துக்களை வெளியிட்டு, கொலையாளி கூட, தன் மனித மாண்பை இழப்பதில்லை என்பதை நாம் நினைவுகூரவேண்டும், என்ற அழைப்பை முன்வைத்துள்ளார்.

மேலும், இஞ்ஞாயிறன்று இரண்டு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவருகைக்காலம் என்பது, நம்பிக்கைக்குரிய தொடர் அழைப்பாகும், மேலும், கடவுள் நம் வரலாற்றில் குடியிருப்பதுடன், வரலாற்றின் இறுதி நோக்கமாக இருக்கும் இயேசு கிறிஸ்துவை நோக்கி வழிநடத்திச் செல்கிறார், என முதல் டுவிட்டரில் கூறியுள்ளார்.

விழிப்புடன் செயல்படுவது என்பது, செபிப்பதும் அன்பு கூர்வதுமாகும், என தன் இரண்டாவது டுவிட்டரில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளை வழிபட்டு, அடுத்திருப்பவருக்கு பணியாற்றும்போது, திருஅவை கடவுளை நோக்கி பயணிக்கிறது என கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2020, 15:10