ஹொண்டுராஸ் நாட்டில் வெள்ள பாதிப்பு ஹொண்டுராஸ் நாட்டில் வெள்ள பாதிப்பு 

பாதிப்படைந்தோருடன் ஒருமைப்பாடும், நெருக்கமும்

திருத்தந்தை : அண்மை இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்காகவும் செபிக்கிறேன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்திய அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் ஒருமைப்பாட்டையும் நெருக்கத்தையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவழிபாட்டு ஆண்டின் முதல் ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றியபின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், மத்திய அமெரிக்காவில் பெரும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தார்.

பெரும்புயலாலும், மழையாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக, San Andrés, Providencia, Santa Catalina  ஆகிய தீவுகள், மற்றும், வட கொலம்பியாவின் பசிபிக் பெருங்கடலின் கரைப்பகுதி ஆகியவைகளை தன் முவேளை செப உரையின் இறுதியில்  குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்காகவும் தான் செபிப்பதாகத் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற பெரும்புயலாலும், வெள்ளப்பெருக்காலும், மத்திய அமெரிக்கப் பகுதியில் உள்ள நிக்கராகுவா, குவாத்தமாலா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளும், கொலம்பியா, வெனிசுவேலா ஆகிய நாடுகளும் பாதிப்படைந்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2020, 13:12