தேடுதல்

எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் புதிய முதுபெரும் தந்தை, பேராயர் Pierbattista Pizzaballa அவர்களுக்கு, 'பாலியம்' வழங்கிய திருத்தந்தை எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் புதிய முதுபெரும் தந்தை, பேராயர் Pierbattista Pizzaballa அவர்களுக்கு, 'பாலியம்' வழங்கிய திருத்தந்தை  

இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தைக்கு 'பாலியம்'

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லத்தில், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் புதிய முதுபெரும் தந்தை பேராயர் Pierbattista Pizzaballa அவர்களுக்கு, 'பாலியம்' என்றழைக்கப்படும் கழுத்துப் பட்டையை வழங்கினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 28, இப்புதனன்று காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லத்தில் நிறைவேற்றிய திருப்பலிக்குப்பின், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் புதிய முதுபெரும் தந்தையாக நியமிக்கப்பட்ட பேராயர் Pierbattista Pizzaballa அவர்களுக்கு, 'பாலியம்' என்றழைக்கப்படும் கழுத்துப்பட்டையை வழங்கினார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை திருஅவையின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகப் பணியாற்றிவந்த பேராயர் Pizzaballa அவர்களை, அத்திருஅவையின் முதுபெரும்தந்தை என்று, அக்டோபர் 24, கடந்த சனிக்கிழமை, திருத்தந்தை நியமனம் செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, பேராயர் Pizzaballa அவர்கள், அக்டோபர் 28 இப்புதனன்று, வத்திகானுக்கு வருகை தந்து, திருத்தந்தையின் கரங்களிலிருந்து பாலியம் கழுத்துப்பட்டையைப் பெற்றார்.

இஸ்ரேல், பாலஸ்தீனா, ஜோர்டன் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் வாழும் 2,93,000 இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கர்களுக்கு, பேராயர் Pizzaballa அவர்கள், முதுபெரும்தந்தையாகப் பணியாற்றுகிறார்.

ஜூன் 29, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவன்று  நிறைவேற்றிய திருப்பலியில், இவ்வாண்டு நியமனம் பெற்ற பேராயர்களுக்கென உருவாக்கப்பட்டிருந்த கழுத்துப் பட்டையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ச்சித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2020, 13:27