தேடுதல்

புனித பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரையின்போது  - 270920 புனித பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரையின்போது - 270920 

நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தோருடன் ஒருமைப்பாடு

திருத்தந்தை : அர்மேனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கிடையே எழுந்துள்ள பதட்ட நிலைகளை, நல்மனம், மற்றும், உடன்பிறந்த உணர்வுடன் கூடிய உறுதியான நடவடிக்கைகள் வழியாக தீர்வுகாண முயலவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்தோர், மற்றும், புகலிடம் தேடுவோருக்கென உருவாக்கப்பட்ட உலக நாள் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்காகவும், அவர்களுக்கு உதவுவோருக்காகவும் தான் செபிப்பதாகக் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக குடியேற்றதாரர், மற்றும், புலம்பெயர்ந்தோர் நாள், இவ்வாண்டு, 'சொந்த நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தோருக்கு' என்ற மையக்கருத்துடன் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதைக் குறித்து தன் உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு, மற்றும், அவரின் குடும்பத்தைப்போல், தப்பியோட கட்டாயப்படுத்தப்பட்டுள்ள மக்களை நினைவுகூர்வதாக தெரிவித்தார்.

அர்மேனியா, அசர்பைஜான் பதட்டநிலைகள்

மேலும், அர்மேனியா, மற்றும், அசர்பைஜான் நாடுகளுக்கிடையே எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தைகள் வழியாக தீர்வு காணப்படவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்மேனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கிடையே எழுந்துள்ள பதட்ட நிலைகளை, நல்மனம், மற்றும், உடன்பிறந்த உணர்வுடன் கூடிய உறுதியான நடவடிக்கைகள் வழியாக தீர்வுகாண முயலவேண்டும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.

உலக சுற்றுலாத்துறை பாதிப்பு

மேலும், உலகளவில், சுற்றுலாத்துறையில் பணிபுரிவோர், இந்த கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதைக் குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களோடு தன் ஒருமைப்பாட்டை வெளியிட்டதோடு, அனைத்தும் இயல்புநிலைக்கு விரைவில் திரும்பும் என்ற நம்பிக்கையையும் ஊட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2020, 12:33