தேடுதல்

பிலிப்பீன்ஸ் இளைஞர்கள் பிலிப்பீன்ஸ் இளைஞர்கள் 

மாணவர்களை, கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களாக உருவாக்கவேண்டும்

சமுதாயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும், அக்கறையுடன் சீர்தூக்கிப் பார்க்கும் கண்ணோட்டத்தையும், அதேவேளையில், அவற்றை கிறிஸ்தவ நம்பிக்கையுடனும் நோக்குவதற்கு, கத்தோலிக்க கல்விக்கூடங்கள் மாணவர்களுக்கு உதவி செய்யவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் பணியாற்றும் கத்தோலிக்க கல்வியாளர்கள், மாணவர்களை, வருங்காலத் தலைவர்களாக உருவாக்குவதோடு, அவர்களை, மனசாட்சியுள்ள கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களாகவும் உருவாக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் நிறுவப்பட்டுள்ள கத்தோலிக்கப் பள்ளிகளின் மாநாடு, செப்டம்பர் 22, இச்செவ்வாய் முதல், செப்டம்பர் 25, இச்சனிக்கிழமை முடிய நடைபெறுவதையொட்டி, இந்த மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க கல்விக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, கோவிட் 19 தொற்றுக்கிருமியின் காரணத்தால், இணையவழி மாநாடாக நடைபெறுகிறது என்று, இக்கழகத்தின் தலைவர், அருள்பணி Elmer Dizon அவர்கள் கூறினார்.

சமுதாயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும், அக்கறையுடன் சீர்தூக்கிப் பார்க்கும் கண்ணோட்டத்தையும், அதே வேளையில், அவற்றை கிறிஸ்தவ நம்பிக்கையுடனும் நோக்குவதற்கு, கத்தோலிக்க கல்விக்கூடங்கள் மாணவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.

பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் கத்தோலிக்கக் கல்வி மற்றும் மறைக்கல்வி பணிக்குழுவின் தலைவர் ஆயர் Roberto Mallari அவர்கள், தங்கள் நாட்டில் கல்வி, அதிலும் குறிப்பாக கத்தோலிக்கக் கல்வி சந்தித்துவரும் சவால்களைக் குறிப்பிட்டு, இந்த சவால்களை எதிர்கொள்ள தலத்திருஅவை தயாராக உள்ளது என்று கூறினார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் நிறுவப்பட்டுள்ள 1,500க்கும் மேற்பட்ட கத்தோலிக்க கல்விக்கூடங்களின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க கல்விக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், செப்டம்பர் 25 இவ்வெள்ளியன்று, மறைபரப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2020, 14:08