சிலுவையுடன் திருத்தந்தை சிலுவையுடன் திருத்தந்தை 

மத்தியத்தரைக் கடல் பகுதி நாடுகளில் அமைதி நிலவ

சிலுவையை இடையூறாக நோக்குவது என்பது, நம் மீட்புக்காக இயேசுவிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை, தவிர்ப்பதைக் குறிப்பதாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

மத்தியத்தரைக்கடல் பகுதியில் இடம்பெற்றுவரும் பதட்டநிலைகள் குறித்த தன் ஆழ்ந்த கவலையை, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தி வழியே வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இது குறித்து, தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியிலும் குறிப்பிட்டிருந்த திருத்தந்தை, இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டரில், 'மத்தியதரைக்கடல் பதட்ட நிலைகள் குறித்து கவலையுடன் கவனித்து வரும் அதேவேளை, அப்பகுதி மக்களின் அமைதியை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மோதல்களுக்குத் தீர்வு காண, அனைத்துலக சட்டங்களை மதிப்பதுடன் கூடிய பேசசுவார்த்தைகள் இடம்பெற வேண்டும் என விண்ணப்பிக்கிறேன்', என கூறியுள்ளார்.

மேலும், திருத்தந்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இஞ்ஞாயிறன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தை மையமாக வைத்து எண்ணங்களை பகிர்ந்திருந்தார்.

பேதுருவுக்கும் ஏனைய சீடர்களுக்கும், ஏன், நமக்கும், சிலுவை என்பது, பெரிய இடையூறாகத் தோன்றலாம், ஆனால்,  இயேசுவுக்கோ, அது சிலுவையிலிருந்து தப்பிச் செல்வதைக் குறிக்கும். ஏனெனில், சிலுவையை இடையூறாக நோக்குவது, நம் மீட்புக்காக, இறைவன், இயேசுவிடம் ஒப்படைத்த பணியை, அதாவது இறைவிருப்பத்தை தவிர்ப்பதைக் குறிப்பதாகும்', என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம் பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2020, 13:20