செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

நன்றியுணர்வும், பாராட்டும், கிறிஸ்தவர்களின் குணநலன்கள்

விண்ணரசு என்பது, நம் ஒவ்வொருநாள் வாழ்வையும் புதுப்பித்து, பரந்து விரிந்த தொடுவானங்களை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்கின்றது,

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

நாம் சேவையாற்றப்படுவதற்கு தகுதியுடைவர்கள் என்பதாலேயே, நமக்கு பிறர் சேவையாற்றுகிறார்கள் என நாம் ஒருநாளும் எண்ணக்கூடாது என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்.

மருத்துவரும் மறைசாட்சியுமான புனித Pantaleone அவர்களின் திருவிழாவை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'நமக்கு பணியாற்றப்படும்போது, நாம் அதற்கு தகுதியுடையவர்கள் என்பதாலேயே அது ஆற்றப்படுகிறது என எண்ணக்கூடாது. நன்றியுணர்வும், பாராட்டும் முதலில் நல்ல நடவடிக்கைகள், அதேவேளை, அவை கிறிஸ்தவர்களிடம் இருக்கவேண்டிய  பண்புகள். இறையரசின் எளிய, ஆனால், உண்மை அடையாளங்கள் அவை', என கூறியுள்ளார்.

மேலும், ஜூலை 26ம் தேதி, இஞ்ஞாயிறன்று இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், விண்ணரசு என்பது, இவ்வுலகம் வழங்கும் மேம்போக்கான பொருட்களுக்கு எதிரானது, மற்றும், ஆர்வமற்ற வாழ்வுக்கும் எதிரானது. இது நம் ஒவ்வொருநாள் வாழ்வையும் புதுப்பித்து, பரந்து விரிந்த தொடுவானங்களை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்கின்றது என எழுதியுள்ளார்.

'இயேசுவின் தாத்தா, பாட்டியான, புனிதர்கள் சுவக்கீன், மற்றும், அன்னாவின் நினைவு நாளான இஞ்ஞாயிறன்று, நான் இளையோருக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். முதியோர், குறிப்பாக, தனிமையில் வாழ்வோர் குறித்து அக்கறையுடன் செயல்படுமாறு அழைப்பு விடுக்கிறேன். அன்பு இளையோரே, ஒவ்வொரு முதியோரும் உங்கள் தாத்தா பாட்டியே’, என்ற சொற்களை, திருத்தந்தை, தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியாகப் பதிவுசெய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2020, 15:31