திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

சவால்களுக்கு நடுவே, இறைவாக்கு உரைக்கும் சக்தி பிறக்கிறது

"கடவுள், வழங்கும் சவால்களை ஏற்றுக்கொள்ளும்போது, இறைவாக்கு உரைக்கும் சக்தி பிறக்கிறது, அனைத்தையும் அமைதிப்படுத்தி, கட்டுப்பாட்டுக்குள் வைப்பதில் நாம் கவனம் செலுத்தும்போது, இறைவாக்கு உரைக்கும் சக்தி பிறப்பதில்லை" - திருத்தந்தையின் டுவிட்டர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவாக்கு உரைக்கும் வரத்தைப் பெறுவது, அதை பயன்படுத்துவது ஆகிய கருத்துக்களை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 22, இப்புதனன்று, @pontifex என்ற டுவிட்டர் முகவரியில், தன் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"கடவுள் வழங்கும் சவால்களை ஏற்றுக்கொள்ளும்போது, இறைவாக்கு உரைக்கும் சக்தி பிறக்கிறது, அனைத்தையும் அமைதிப்படுத்தி, கட்டுப்பாட்டுக்குள் வைப்பதில் நாம் கவனம் செலுத்தும்போது, இறைவாக்கு உரைக்கும் சக்தி பிறப்பதில்லை" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

12-12-12 என்ற சிறப்பான எண்கள் கொண்ட நாளன்று, அதாவது, 2012ம் ஆண்டு, டிசம்பர் 12ம் தேதி, அப்போது திருத்தந்தையாகப் பணியாற்றிய 16ம் பெனடிக்ட் அவர்களால், @pontifex என்ற வலைத்தள முகவரியுடன் டுவிட்டர் செய்திகள் துவங்கப்பட்டன.

'பாலம் அமைப்பவர்' என்ற பொருள்படும் Pontifex என்ற இலத்தீன் சொல்லை, தன் டுவிட்டர் முகவரியாகக் கொண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் டுவிட்டர் செய்திகளைத் துவக்கினார்.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டு வரும் டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 87 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, வெளியாகும் புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram தளத்தில், பதிவாகி வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2020, 13:16