George Floyd அவர்கள் கொலையுண்டதை எதிர்த்து போராட்டங்கள் George Floyd அவர்கள் கொலையுண்டதை எதிர்த்து போராட்டங்கள்  

ஒப்புரவுக்காகவும், அமைதிக்காகவும் மன்றாடுவோம்

இறைவேண்டல் குறித்தும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாகியுள்ள போராட்டங்களுக்கு அடிப்படையாக விளங்கும் இனவெறி, மற்றும் வன்முறை ஆகியவை குறித்தும், தன் டுவிட்டர் செய்திகளை திருத்தந்தை வெளியிட்டார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவேண்டல் குறித்தும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாகியுள்ள போராட்டங்களுக்கு அடிப்படையாக விளங்கும் இனவெறி, மற்றும் வன்முறை ஆகியவை குறித்தும், ஜூன் 3, இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வெண்ணங்களில் ஒரு சிலவற்றை தன் டுவிட்டர் செய்தியாகவும் வெளியிட்டார்.

"இனவெறி, மற்றும் புறக்கணிப்பு எந்த வடிவில் இருந்தாலும், அவற்றைக் கண்டும் கண்மூடிக்கொள்வதோ, அவற்றைச் சகித்துக்கொள்வதோ இயலாது. அதே வேளையில், வன்முறைகள் அழிவையும், தோல்வியையும் தன்னிலேயே கொண்டுள்ளது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். வன்முறையால் எதையும் ஆதாயமாக்கிக்கொள்ள முடியாது, அதிக இழப்பையே சந்திக்கவேண்டியிருக்கும். ஒப்புரவுக்காகவும், அமைதிக்காகவும் மன்றாடுவோம்" என்ற உணர்வுப்பூர்வமான சொற்களை, திருத்தந்தை தன் முதல் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

இறைவேண்டல் குறித்து திருத்தந்தை வழங்கிய மறைக்கல்வி உரையையடுத்து, "நம்பிக்கையோடு வேண்டுவதற்கு ஆபிரகாமிடமிருந்து கற்றுக்கொள்வோம்: செவிமடுத்தல், உடன் நடத்தல், உரையாடலில் ஈடுபடுதல், இறைவனின் வார்த்தையை ஏற்று, அதை செயல்படுத்துதல் ஆகிய பண்புகளை அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம்" என்ற சொற்களை தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2020, 14:41