சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி 020520 சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி 020520 

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

இந்த நெருக்கடிவேளையில், அரசுத் தலைவர்கள், மக்களின் நலனுக்காக மிகுந்த ஒன்றிப்பைக் காட்டவேண்டியுள்ளது என்பதை, ஆண்டவர் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பாராக, அதற்கு அவசியமான வலிமையையும் அவர்களுக்கு அருள்வாராக

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில், மே 02, இச்சனிக்கிழமை காலையில் நிறைவேற்றிய திருப்பலி மற்றும், மறையுரையை மையப்படுத்தி, மூன்று டுவிட்டர் செய்திகளை, ஹாஷ்டாக்குகளுடன் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“தங்கள் மக்கள் மீது அக்கறை காட்டும் பொறுப்பிலுள்ள அரசுத் தலைவர்களுக்காகச் செபிப்போம். இந்த நெருக்கடிவேளையில், மக்களின் நலனுக்காக அவர்கள் மிகுந்த ஒன்றிப்பைக் காட்டவேண்டியுள்ளது என்பதை, ஆண்டவர் அவர்களுக்கு கற்றுத்தருவாராக,  அதற்கு அவசியமான வலிமையை அவர்களுக்கு அருள்வாராக, ஏனெனில், ஒன்றிப்பு,  மோதல்களைவிட மேலானது” என்ற சொற்கள் திருத்தந்தையின் முதல் டுவிட்டரிலும்,

“இந்த கொள்ளை நோய் காலத்தை, நம் சிறப்பான வருங்காலத்தைத் தயாரிப்பதற்கு முன்வைக்கப்படும் தேர்வு விவகாரமாக, நாம் எல்லாரும் மாற்றுவோம், தொலைநோக்குப் பார்வையின்றி, யாருக்கும் வருங்காலம் கிடையாது” என்ற சொற்கள் திருத்தந்தையின் 2வது டுவிட்டரிலும்,

“ஒரு நெருக்கடி, தெரிவு செய்வதற்குரிய நேரம், இந்த கொள்ளை நோய், சமுதாய நெருக்கடியின் காலம், நாம் எப்படி இதனை எதிர்கொள்ள வேண்டும்? விடா மனஉறுதி, அமைதி மற்றும், கடவுளுக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதன் வழியாகவே. ஒரு நெருக்கடியின் நேரம், வலிமையாக மாறுவதற்கு, நெருப்பு வழியாகக் கடந்து செல்வதாகும்” என்ற சொற்கள் திருத்தந்தையின் 3வது டுவிட்டரிலும் பதிவாகியிருந்தன.

மேலும், மே மாதத்தில் இல்லங்களில் செபமாலை செபிப்பதன் அழகை நாம் மீண்டும் கண்டுணர்வோமாக, ஒவ்வொரு முறையும் செபமாலை செபிக்கும்போது, அதன் இறுதியில், அன்னை மரியின் பரிந்துரையை வேண்டுவோம், இந்த கொள்ளை நோயிலிருந்து நம்மை விடுவிக்கும்படியாகவும், வாழ்வு, அமைதியான முறையில் சாதாரண நிலைக்குத் திரும்பும்படியாகவும் அன்னை மரியாவிடம் மன்றாடுவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 01, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தி வழியாக அழைப்பு விடுத்துள்ளார். 

மே மாதத்தில் இல்லங்களில் செபமாலை செபிப்பதற்கு யூடியூப் வழியாக திருத்தந்தை வழங்கியுள்ள காணொளிச் செய்தியைக் கேட்பதற்கென, அதன்  http://www.vatican.va/content/francesco/en/letters/2020/documents/papa-francesco_20200425_lettera- esedimaggio.html முகவரியும், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2020, 14:31