புலம்பெயர்ந்துள்ள மக்கள் சந்திப்பு புலம்பெயர்ந்துள்ள மக்கள் சந்திப்பு  

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்கள் பற்றிய, புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் 106வது உலக நாள் செய்தியை, கோவிட்-19வின் விளைவால், மிகவும் ஆபத்தான சூழலை அனுபவிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிக்கின்றேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மேலும், மே 15, இவ்வெள்ளியன்று, சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி, மறையுரை, புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் 106வது உலக நாள் செய்தி ஆகிய மூன்றையும் மையப்படுத்தி, டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தி, “இன்று குடும்பங்களின் உலக நாள். குடும்பங்களுக்காக நாம் இறைவனை மன்றாடுவோம், அதன்வழியாக, குடும்பங்களில், ஆண்டவரின் ஆவி, அன்புணர்வு, நன்மதிப்பு மற்றும் சுதந்திரம் வளரும் என்ற சொற்கள், #InternationalDayOfFamilies, #PrayTogether ஆகிய இரு ஹாஷ்டாக்குகளுடன் பதிவாகியிருந்தது. 

#HomilySantaMarta என்ற ஹாஷ்டாக்குடன் வெளியான திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “இயேசுவைப் பின்செல்வதற்கு முழுநிறைவான பாதை, குழப்பத்தைக் கொணரும் இறுக்கமான மனநிலை அல்ல, மாறாக, அப்பாதை, நற்செய்தி வழங்கும் சுதந்திரம் ஆகும், இது மகிழ்வைக் கொணர்கிறது” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.      

மே 15, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்ட, புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் 106வது உலக நாள் செய்தியை மையப்படுத்தி, பதிவாகியிருந்த திருத்தந்தையின் மூன்றாவது டுவிட்டர் செய்தியில், “2020ம் ஆண்டைக் குறித்து நிற்கும் பெருந்துயர நிகழ்வுகளின் ஒளியில், நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்கள் பற்றிய, எனது புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாள் செய்தியை, கோவிட்-19வின் விளைவால், மிகவும் ஆபத்தான மற்றும், விளிம்புநிலை சூழலை அனுபவிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிக்கின்றேன்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், திருத்தந்தையின் இந்த உலக நாள் செய்தியை வாசிப்பதற்கு உதவியாக, இணையதள முகவரியும், இச்செய்தியுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளது.

http://w2.vatican.va/content/francesco/en/messages/migration/documents/papa-francesco_20200513_world-migrants-day-2020.html

குடும்பங்களின் உலக நாள், 1995ம் ஆண்டிலிருந்து சிறப்பிக்கப்பட்டு வருகிறது. குடும்பங்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்நாள் உருவாக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2020, 15:29