மே 05, திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் மே 05, திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் 

மே 05, திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

இன்று கொள்ளைநோயால் உயிரிழந்தவர்களுக்காகச் செபிப்போம், அவர்கள், தங்கள் உறவுகளின் அன்பின்றி, தனிமையில் இறந்துள்ளனர், இவர்களில் பலருக்கு, அடக்கச்சடங்குகள்கூட இடம்பெறவில்லை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“இன்று கொள்ளைநோயால் உயிரிழந்தவர்களுக்காகச் செபிப்போம், அவர்கள், தங்கள் உறவுகளின் அன்பின்றி, தனிமையில் இறந்துள்ளனர், இவர்களில் பலருக்கு, அடக்கச்சடங்குகள்கூட இடம்பெறவில்லை, இவர்களை, ஆண்டவர் தன் மகிமையில் சேர்த்துக்கொள்வதற்கு நாம் எல்லாரும் ஒன்றிணைந்து செபிப்போம்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 05, இச்செவ்வாயன்று, தன் முதல் டுவிட்டர் செய்தி வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.

வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், நிறைவேற்றும் திருப்பலி, மற்றும், மறையுரையை மையப்படுத்தி, இந்த கோவிட்-19 பரவல் காலத்தில் டுவிட்டர் செய்திகளை பதிவுசெய்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில் #PrayTogether என்ற ஹாஷ்டாக்குடன், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்காகச் செபிக்குமாறு எல்லாரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

மறையுரையை மையப்படுத்தி, #HomilySantaMarta என்ற ஹாஷ்டாக்குடன் வெளியான திருத்தந்தையின் 2வது டுவிட்டர் செய்தியில், “செல்வம், அக்கறையின்மை, கடின இதயம், தன்னையே எப்போதும் முன்னிலைப்படுத்தும் போக்கு, உலகியல்தன்மை போன்ற, சில மனப்பான்மைகள், ஆண்டவரின் அறிவில் வளருவதற்கு, நம்மை அனுமதிப்பதில்லை. சுதந்திரம் குறைபடுகின்றது. சுதந்திரமின்றி நாம் இயேசுவைப் பின்செல்ல முடியாது” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 May 2020, 13:58