போலந்தின் வாதோவிச் நகரில், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம் போலந்தின் வாதோவிச் நகரில், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம் 

புனிதத் திருத்தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம்

திருத்தந்தை : நூறு ஆண்டுகளுக்கு முன் நமதாண்டவர் தன் மக்களைச் சந்தித்தார், நமக்கென ஒரு மேய்ப்பரைத் தந்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் என்ற பெயரில் இறைவன் நமக்கு அனுப்பித் தந்த மேய்ப்பர், செபம், மக்களுடன் நெருக்கம், மற்றும், நீதியின் மனிதராக இருந்தார் என இத்திங்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் பிறந்ததன் நூறாம் ஆண்டு இத்திங்களன்று சிறப்பிக்கப்படுவதையொட்டி, தன் முதல் டுவிட்டர் செய்தியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன் நமதாண்டவர் தன் மக்களைச் சந்தித்தார், நமக்கென ஒரு மேய்ப்பரைத் தந்தார், அவர், செபம், மக்களுடன் நெருக்கம், இரக்கத்தோடு ஒன்றிணைந்துச் செல்லும் நீதியின்பால் அன்பு போன்றவைகளைக் கொண்டிருந்த மேய்ப்பராக இருந்தார் என அதில் எழுதியுள்ளார்.
இத்திங்களன்று வெளியிட்ட தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியிலும், புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்தே எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இந்நாளில் நம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் உயரிய விசுவாசத்தையும், எடுத்துக்காட்டையும் நினைவுகூர்கிறோம், நம் உள்ளக் கதவுகளை இயேசுவுக்கு திறந்துவிடுவோம் எனவும், அஞ்சவேண்டாம் எனவும், அவர் விடுத்த அழைப்பின் எதிரொலிக்கு இப்போது செவிமடுப்போம். நமக்கு முன் நடந்துசென்றுள்ள அப்புனிதரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இவ்வுலகில் நடைபோடுவோம், நாம் என்றுமே தனிமையில் இல்லை' என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2020, 13:59