இந்தியாவின் Baruipur மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Shyamal Bose இந்தியாவின் Baruipur மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Shyamal Bose 

Baruipur மறைமாவட்ட ஆயராக, வாரிசுரிமை ஆயர்

இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், வன்முறைகள் குறைந்து, படைப்பாற்றலுடன் முன்னோக்கிச் செல்லும் வழிகளை குடும்பங்கள் கண்டுணர, இணைந்து செபிப்போம் என்ற விண்ணப்பம் இடம்பெற்றுள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் Baruipur மறைமாவட்ட ஆயர் Salvadore Lobo அவர்கள் ஓய்வுபெறுவதைத் தொடர்ந்து, அம்மறைமாவட்ட ஆயராக Shyamal Bose அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஆண்டு மே மாதம் Baruipur மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட 60 வயதாகும் ஆயர் போஸ் அவர்கள், தற்போது அம்மறைமாவட்டத்தின் ஆயராக முழுப்பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

அத்துடன், மேற்கு வங்கத்தின் Asansol மறைமாவட்டத்தின் ஆயர் Cyprian Monis அவர்கள் விடுத்துள்ள, ஒய்வு பெறுவதற்கான விண்ணப்பத்தையும் ஏற்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், மே 4, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட மூன்று டுவிட்டர் செய்திகளில், வன்முறைகள் குறைந்து, படைப்பாற்றலுடன் முன்னோக்கிச் செல்லும் வழிகளை குடும்பங்கள் கண்டுணர, இணைந்து செபிப்போம் என்ற விண்ணப்பம், முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றுள்ளது.

திருஅவையில் நிலவவேண்டிய ஒன்றிப்பைக் குறித்து, தன் மறையுரையை வழங்கியத் திருத்தந்தை, அதே கருத்தை, தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியாகவும், கோவிட் 19 தொற்றுக்கிருமியை ஒழிக்க, மனித உடன்பிறந்த நிலை என்ற அமைப்புடன் இணைந்து, மே மாதம் 14ம் தேதி நடைபெறும் செபம், உண்ணா நோன்பு, மற்றும், பிறரன்பு நடவடிக்கையின் நாளை கடைபிடிக்க, விடுக்கப்பட்டுள்ள அழைப்பு மூன்றாவது டுவிட்டர் செய்தியாகவும் வெளியாயின.

இதற்கிடையே, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை நான்கு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

தன் முதல் டுவிட்டரில், இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட நல்லாயன் ஞாயிறு குறித்தும், இரண்டாவது டுவிட்டரில், இத்துன்பகரமான சூழலில், இறைவனின் மக்களுக்காக தியாக உணர்வுடன் பணியாற்றும் அருள்பணியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்காக செபிப்போம் எனவும், மூன்றாவது டுவிட்டரில், இஞ்ஞாயிறு சிறப்பிக்கப்பட்ட தேவ அழைத்தலுக்கான உலக செப நாளை குறிப்பிட்டு, தேவ அழைத்தலுக்காக செபிக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தியுள்ளார்.

மே 3ம் தேதி, பத்திரிகை கருத்து சுதந்திர உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, தன் நான்காவது டுவிட்டரை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நெருக்கடியான சூழலில், மக்களுக்கு பணியாற்றும், நல்ல, மற்றும், சுதந்திர சமுகத்தொடர்பாளர்கள் தேவைப்படுகிறார்கள், குரலாற்றோரின் குரலாக செயல்பட்டு, ஒன்றிப்பு மற்றும் அமைதியின் பாதையில் நடைபோடும் சமூகத்தொடர்பு துறைத் தேவைப்படுகின்றது என அதில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2020, 13:06