தேடுதல்

ஏழைகளுக்காகவும் சிறைக்கைதிகளுக்காகவும் திருப்பலியின்போது செபித்த திருத்தந்தை ஏழைகளுக்காகவும் சிறைக்கைதிகளுக்காகவும் திருப்பலியின்போது செபித்த திருத்தந்தை 

நம் பாவங்களுக்குரிய தண்டனையை ஏற்று, நம்மை மீட்ட இறைவன்

திருத்தந்தை : தாழ்ச்சியுடனும், பொறுமையுடனும், ஒரு பணியாளுக்குரிய கீழ்ப்படிதலுடன், நம் மீது கொண்ட அன்பால் நம்மை மீட்டார் இறைமகன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 6, இத்திங்கள் காலை திருப்பலியின் துவக்கத்தில், சிறைப்பட்டோருக்காக செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அதிக எண்ணிக்கையில், நெருக்கமாக வாழும் நிலையில் உள்ள சிறைக்கைதிகளின் நடுவே, தொற்றுக்கிருமியின் தாக்கம் அதிகம் இடம்பெறும் ஆபத்து உள்ளது. எனவே, அவர்களுக்காகச் செபிப்போம்" என்ற செபக்கருத்தை தன் முதல் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

தன் மறையுரையின் தொடர்ச்சியாக திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், "வறியோருடன் நாம் கொள்ளும் உறவின் அடிப்படையில் தீர்ப்பிடப்படுவோம். 'ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள்' என்று கூறிய இயேசு, அவர்களோடு தானும் எப்போதும் இருப்பேன் என்பதையும் கூறியுள்ளார்" என்ற சொற்கள் இடம்பெற்றன.

நாம் தற்போது வாழ்ந்துவரும் துன்பம் நிறைந்த காலத்தில், மிகவும் முக்கியமானவற்றில் மட்டும் கவனம் செலுத்தும்படி விண்ணப்பிக்கும் திருத்தந்தையின் மூன்றாவது டுவிட்டர் செய்தியில், வாழ்வு, மட்டுமே அளக்கப்படும் என்ற கருத்தும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வெளியிட்ட ஐந்து டுவிட்டர் செய்திகளில், கடவுள் நம்மீது கொண்ட அன்பால், நம் பாவங்களுக்குரிய தண்டனையை தான் ஏற்றுக்கொண்டார் என தன் முதல் செய்தியில் கூறியுள்ளார்.

நம் பாவங்களுக்குரிய தண்டனையை தான் ஏற்றுக்கொண்டு, நம்மை இறைவன் மீட்டார் என்பது நம்மை அதிசயப்பட வைக்கிறது. எவ்வகையிலும் மறுப்பில்லாமல், அதேவேளை, தாழ்ச்சியுடனும்,பொறுமையுடனும், ஒரு பணியாளுக்குரிய கீழ்ப்படிதலுடன், நம் மீது கொண்ட அன்பால் நம்மை மீட்டார், என தன் முதல் டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை.

இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில்,  இயேசுவின் பணியில் இறைத்தந்தை அவரை உயர்த்திப் பிடித்தார். இயேசுவை அழுத்திய தீமைகளை இறைவன் எடுத்துவிடவில்லை, மாறாக, அவரின் துன்பத்தில் பலப்படுத்தினார். அதன் வழியாக நன்மையால் தீமை மேற்கொள்ளப்படவும்,அதுவும், இறுதி எல்லை வரை அன்புகூரப்படும் ஒரு அன்பால், என எழுதியுள்ளார்.

மேலும் மூன்று டுவிட்டர் செய்திகளை இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை, ஏனெனில் கடவுள் நம்மோடு இருக்கிறார் எனவும், நாம் கடவுளுக்கு சேவையாற்றுகிரோம் என நாம் பலவேளைகளில் எண்ணிக்கொண்டிருக்க, அவரே நமக்குப் பணியாற்றுகிறார் என்பதை உணர்வோம் எனவும், இளையோரே, உங்கள் வாழ்வை இறைவனுக்கும் பிறருக்கும் அர்ப்பணிக்க அஞ்சாதீர்கள், ஏனெனில், பிறருக்கு வழங்கும்போதே எதுவும் கொடையாக மாறுகிறது எனவும் தன் டுவிட்டர் செய்திகளில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2020, 13:54