உரோம் மத்திய இரயில் நிலையப் பகுதியில் உதவுகின்ற கர்தினால் Krajewski உரோம் மத்திய இரயில் நிலையப் பகுதியில் உதவுகின்ற கர்தினால் Krajewski  

உரோம் நகரில் வாழ்கின்ற வீடற்றவர்க்கு உதவி

கர்தினால் Krajewski அவர்கள், உரோம் மத்திய இரயில் நிலையப் பகுதியில், சாலைகளில் வாழ்கின்ற மக்களுக்கு, திருத்தந்தையின் சார்பில், சில தற்காப்புப் பொருள்களை வழங்கினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 17, இவ்வெள்ளி காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி, மற்றும், மறையுரையை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்திகளை பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னையர்களாக மாறவிருக்கும், குழந்தை பிறப்பை எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்காக நாம் எல்லாரும் செபிப்போம் என்று, #PrayTogether என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தை வெளியிட்டுள்ள முதல் டுவிட்டர் செய்தியில், இந்த அன்னையர், "என் குழந்தை எவ்வித உலகத்தில் வாழப்போகிறது?" என்ற கேள்வியை தங்களையே கேட்டுக்கொள்கின்றனர், நிச்சயமாக, அது ஒரு வித்தியாசமான உலகாக இருக்கும், ஆயினும், ஆண்டவர் அளப்பரியவிதமாக அன்புகூர்வதாகவும் அது விளங்கும் என்ற துணிவையும், நம்பிக்கையையும் ஆண்டவர் அவர்களுக்கு அருள்வாராக என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

வீடற்றவர்க்கு உதவி

மேலும், ஏப்ரல் 16, இவ்வியாழன் மாலையில், உரோம் மத்திய இரயில் நிலையத்திற்கருகில் தங்கியிருக்கும் வீடற்ற மக்களைச் சந்தித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆறுதலைத் தெரிவித்தார், கர்தினால் Konrad Krajewski.

திருத்தந்தையின் தர்மச் செயல்களை ஆற்றும் கர்தினால் Krajewski அவர்கள், உரோம் மத்திய இரயில் நிலையப் பகுதியிலுள்ள Marsala சாலைக்குச் சென்று, சில தன்னார்வலர்களின் உதவியுடன், தெருவில் வாழ்கின்ற மக்களைச் சந்தித்து, திருத்தந்தையின் சார்பில், சில தற்காப்புப் பொருள்களை வழங்கினார்.

கொரோனா கிருமி தொற்றாமல் தடுப்பதற்கு உதவும், படுக்கைகள், சோப், உணவு, முகக் கவசங்கள் உட்பட, பல பொருள்களை வழங்கினார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2020, 12:25