மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இஸ்ரேல் அரசுத்தலைவர் Reuven Rivlin அவர்களுக்கு, தொலைபேசி வழியாக, பாஸ்கா விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நாள்களில் பாஸ்கா விழாவைக் கொண்டாடும் யூத மக்களுடன், தன் நெருக்கத்தையும் திருத்தந்தை தெரிவித்தார்.
இஸ்ரேல் அரசுத்தலைவர் Rivlin அவர்களும், இந்த முக்கியமான செய்திக்கும், யூத-மத விரோதப் போக்கிற்கு எதிரான நடவடிக்கைக்கு திருத்தந்தை ஆதரவு அளித்து வருவதற்கும், நன்றி தெரிவித்தார். இந்த கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடி காலத்தில், யூத-மத விரோதப் போக்கிற்கு எதிரான நடவடிக்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு திருத்தந்தையைக் கேட்டுக்கொண்ட இஸ்ரேல் அரசுத்தலைவர் Rivlin அவர்கள், சகிப்பற்றதன்மை அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
இஸ்ரேலில், ஏப்ரல் 08, புதன்கிழமையிலிருந்து, ஏப்ரல் 16, வியாழன் வரை பாஸ்கா விழா சிறப்பிக்கப்படுகிறது.