தேடுதல்

Vatican News
ஏப்ரல் மாத செபக் கருத்து 030420 ஏப்ரல் மாத செபக் கருத்து 030420 

ஏப்ரல் மாத செபக் கருத்து: போதையிலிருந்து விடுதலை

போதையினால் துன்புறுபவர்கள் உதவியும், தோழமையும் பெற நாம் மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் மாதச் செபக் கருத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

போதையினால் துன்புறும் மக்கள், தகுந்த உதவியும், தோழமையும் பெற வேண்டுமென்று, இந்த ஏப்ரல் மாதத்தில் சிறப்பாக மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு காணொளிச் செய்தி வழியாக கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் மாதச் செபக் கருத்து பற்றி, காணொளிச் செய்தியில் விவரித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போதையினால் துன்புறுபவர்கள், குறிப்பாக, சூதாட்டம், பாலியல் இன்பத்தைத் தூண்டும் சாதனங்கள், இணையதளம் போன்றவற்றுக்கு அடிமையாகி இருப்போருக்காக இறைவனை மன்றாடுவோம் என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாதச் செபக் கருத்து பற்றி காணொளிச் செய்தி வழியாக விளக்கிவரும் திருத்தந்தை, இந்த ஏப்ரல் மாதச் செபக் கருத்து பற்றி, ஏப்ரல் 2, இவ்வியாழன் மாலையில் விளக்கினார்.

நிச்சயமாக, நீங்கள் எல்லாரும் போதைக்கு அடிமையாகி இருப்போரின் துயரநிலை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதேபோல், சூதாட்டம், பாலியல் இன்பத்தைத் தூண்டும் ஓவியங்கள், படங்கள், மற்றும் இலக்கியங்கள், இணையதளம், கணனி உலகத்தின் ஆபத்துக்கள் போன்றவை பற்றியும் நினைத்திருப்பீர்கள், இவற்றால் துன்புறும் எல்லாருக்கும், இரக்கத்தின் நற்செய்தி வழியாக உதவ முடியும், போதையின் புதிய முறைகளோடு தொடர்புடைய துன்பங்களைக் குணமாக்க முடியும் என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.  

எனவே, போதையினால் துன்புறுபவர்கள் உதவியும், தோழமையும் பெற நாம் மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்

03 April 2020, 12:15