சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 240320 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 240320 

மார்ச் 24, திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

கோவிட்-19 தொற்றுக்கிருமி நோயாளர்களுக்குப் பணியாற்றும் காரணத்தினால் பல மருத்துவர்களும், அருள்பணியாளர்களும் இந்நாள்களில் இறந்துள்ளனர், பல செவிலியர், இதனால் தாக்கப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகள், அவர்களுக்குச் சிசிக்கையளிக்கும் நலப்பணியாளர்கள், குடும்பத்தினர், மற்றும், தன்னார்வத் தொண்டாற்றுவோர்க்காக இந்நாள்களில் செபித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 24, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் செய்திகள் வழியாக, இந்நோயாளிகளைப் பராமரிக்கையில் இக்கிருமியால் தாக்கப்பட்டு இறந்த மருத்துவர்கள் மற்றும், அருள்பணியாளர்களுக்காகச் சிறப்பாகச் செபித்துள்ளார்.

“இத்தொற்றுக்கிருமி நோயாளர்களுக்குப் பணியாற்றும் காரணத்தினால், இந்நாள்களில் பல மருத்துவர்களும், அருள்பணியாளர்களும் இறந்துள்ளனர், பல செவிலியர், இதனால் தாக்கப்பட்டுள்ளனர், நோயாளிகளைப் பராமரிக்கும் பணியில் இவர்கள் நமக்கு வழங்கிவரும் வீரத்துவமான எடுத்துக்காட்டுக்கு நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன், அவர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் நாம் எல்லாரும் ஒன்றிணைந்து செபிப்போம்” என்ற சொற்களை, #PrayTogether  என்ற ஹாஷ்டாக்குடன், தன் முதல் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய நற்செய்தி #GospelOfTheDay (யோவா.5:1-16) மற்றும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரை #HomilySantaMarta ஆகிய ஹாஷ்டாக்குகளுடன், இச்செவ்வாயன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள 2வது டுவிட்டர் செய்தியில், இன்றைய நற்செய்தி, முடக்குவாதமுற்ற மனிதர், தோல்வி மனப்பான்மை, கவலை, அரைகுறை ஆர்வம் போன்றவற்றால் துன்புறுவது பற்றி நமக்குச் சொல்கின்றது. இந்நிலை ஆன்மாவை வாழ அனுமதிக்காத, நஞ்சுநிறைந்த பனிமூட்டம். மேலும், நம் புதிய வாழ்வின் அடையாளமும் இருக்கிறது, அது, திருமுழுக்கில் நாம் மறுபிறப்படைய இயேசு பயன்படுத்திய தண்ணீராகும்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 March 2020, 15:52