வீடு திரும்பிய மகனை அரவணைக்கும் தந்தை வீடு திரும்பிய மகனை அரவணைக்கும் தந்தை 

கடவுளிடம் திரும்பி வருதல், அவரின் அரவணைப்பிற்கு..

மற்றவரின் வாழ்வைக் காப்பாற்றுவதற்காக, தங்கள் வாழ்வை வழங்கும் மருத்துவர்கள், மருத்துவமனை அலுவலகர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டாற்றும் எல்லாருக்காகவும் நாம் ஒன்றிணைந்து செபிப்போம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மார்ச் 20, இவ்வெள்ளி காலையில் நிறைவேற்றிய திருப்பலி மற்றும், மறையுரையை மையப்படுத்தி, இரு டுவிட்டர் செய்திகளையும், தவக்காலம் பற்றி ஒரு டுவிட்டர் செய்தியையும், ஹாஷ்டாக்குகளுடன் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

#PrayTogether என்ற ஹாஷ்டாக்குடன் வெளியாகிய திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில், மற்றவரின் வாழ்வைக் காப்பாற்றுவதற்காக, தங்கள் வாழ்வை வழங்கும் மருத்துவர்கள், மருத்துவமனை அலுவலகர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டாற்றும் எல்லாருக்காகவும் நாம் ஒன்றிணைந்து செபிப்போம், இவர்கள் அனைவரும், இந்த நெருக்கடியில் நம்மைக் காப்பாற்றும் தூண்கள் என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.  

#HomilySantaMarta என்ற ஹாஷ்டாக்குடன் வெளியாகிய திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், நம் வாழ்வின் காயங்கள் மற்றும், நாம் ஆற்றிய மோசமான செயல்களிலிருந்து நம்மை கடவுளின் கனிவன்பு குணப்படுத்தும். கடவுளிடம் திரும்பி வருதல் என்பது, ஓர் அரவணைப்பிற்கு, இறைத்தந்தையின் அரவணைப்பிற்குத் திரும்புவதாகும் என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

மேலும், திருத்தந்தை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மார்ச் 20, இவ்வெள்ளி காலையில் நிறைவேற்றிய திருப்பலியை யூடியூப்பில் காண்பதற்கு உதவியாக, அதன் முகவரியும், https://www.youtube.com/watch?v=F2X7QzEkCLg டுவிட்டர் செய்தியுடன் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது.

#Lent என்ற ஹாஷ்டாக்குடன் வெளியாகிய திருத்தந்தையின் மூன்றாவது டுவிட்டர் செய்தியில், கடவுளின் அன்பின் நெருப்பு, நம் பாவத்தின் சாம்பல்களை உறிஞ்சிவிடும். இறைத்தந்தையின் அரவணைப்பு, நம் அகத்தைப் புதுப்பிக்கின்றது மற்றும், நம் இதயத்தைத் தூய்மைப்படுத்துகின்றது என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2020, 15:23