மூவேளை செப உரையின்போது செபமாலை செபிக்கத் தூண்டும் திருத்தந்தை மூவேளை செப உரையின்போது செபமாலை செபிக்கத் தூண்டும் திருத்தந்தை 

செபமாலை முயற்சியில் அனைவரும் இணைவோம்

"இத்தாலி முழுவதும் இணைந்து, செபிக்கும் செபமாலை முயற்சியில் அனைவரும் பங்கேற்போம். நோயுற்றோரின் நலமான மரியாவும், நம்பிக்கையில் நிறைந்த புனித யோசேப்பும் நமக்காகப் பரிந்து பேசுவார்களாக" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 19, இவ்வியாழனன்று தான் வழங்கிய மறையுரையின் தொடர்ச்சியாக, தன் முதல் டுவிட்டர் செய்தியையும், தவக்காலம் என்ற 'ஹாஷ்டாக்'குடன் இரண்டாவது டுவிட்டர் செய்தியையும், இவ்வியாழன் மாலை 9 மணிக்கு இத்தாலியில் உள்ள அனைத்து கத்தோலிக்கரும் இணைந்து செபமாலை செபிக்கும்படி, இத்தாலிய ஆயர்கள் விடுத்துள்ள அழைப்பையொட்டி, இணைந்து செபிப்போம் என்ற 'ஹாஷ்டாக்'குடன் மூன்றாவது டுவிட்டர் செய்தியையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

மறையுண்மையில் நுழைவதென்பது...

"நம் ஒவ்வொருநாள் வாழ்வின் உறுதியான செயல்பாடுகளையும், மறையுண்மையின் உறுதியான செயல்பாடுகளையும் வாழும் வரத்திற்காக, புனித யோசேப்பு திருநாளன்று செபிப்போம். மறையுண்மையில் நுழைவதென்பது, கனவு காண்பது மட்டுமல்ல, அது, ஆராதனை செய்வதும் ஆகும்" என்ற சொற்கள் திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

தவக்காலம் என்ற 'ஹாஷ்டாக்'குடன் திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், "பணிவான, அதே வேளை, நடைமுறைக்கேற்ற அடிகளை எடுத்துவைப்பதன் வழியே, நம்பிக்கை முன்னோக்கிச் செல்கிறது" என்ற சொற்களைப் பதிவு செய்திருந்தார்.

"அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இன்றிரவு 9 மணிக்கு, இத்தாலி முழுவதும் இணைந்து செபிக்கும் செபமாலை முயற்சியில் அனைவரும் பங்கேற்போம். நோயுற்றோரின் நலமான மரியாவும், நம்பிக்கையில் நிறைந்த புனித யோசேப்பும் நமக்காகப் பரிந்து பேசுவார்களாக" என்ற விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மூன்றாவது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டிருந்தார்.

கொரோனா தொற்றுக்கிருமியின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் இத்தாலி நாட்டை காத்தருள, செபமாலையைச் செபிக்கும்படி, இத்தாலிய ஆயர் பேரவை விடுத்திருந்த அழைப்பைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் சிறப்பான முறையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 March 2020, 14:59