தேடுதல்

துருக்கி-கிரேக்க நாடுகளின் எல்லையில் இருக்கும் புலம்பெயர்ந்தோர் துருக்கி-கிரேக்க நாடுகளின் எல்லையில் இருக்கும் புலம்பெயர்ந்தோர் 

புலம்பெயர்ந்துவரும் மக்களுக்காக செபிக்க அழைப்பு

திருத்தந்தை : உலகம் முழுவதும், அடைக்கலமும், உதவியும், நாடி அலையும், நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் குறித்து என் எண்ணங்கள் செல்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இன்றைய உலகில், அடைக்கலம் தேடிவரும் புலம்பெயர்ந்த மக்களுக்காக தன்னுடன் இணைந்து அனைவரும் செபிக்குமாறு, தன் ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

போரினால் வெளியேற்றப்பட்டுள்ள ஆண்கள், பெண்கள், மற்றும், குழந்தைகளின் நிலைக் குறித்து, தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகம் முழுவதும் அடைக்கலமும் உதவியும் நாடி அலையும் நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் குறித்து, தன் எண்ணங்கள் செல்கின்றன என்றார்.

இந்நாட்களில், இவர்கள் குறித்த செய்திகள் அதிகம் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன, இவர்களுக்காக செபிப்போம் எனவும், தன் செய்தியின் இறுதியில் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

துருக்கியிலிருந்து, பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர், கிரேக்கம் நோக்கி குடிபெயர்ந்து வரும் இவ்வேளையில், புலம்பெயர்ந்தோருக்காக செபிக்கும்படி விண்ணப்பத்தை விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2020, 15:35