மூவேளை செபஉரை - 290320 மூவேளை செபஉரை - 290320 

இன்றையச் சூழலில் போர் நிறுத்தங்கள் அவசியம்

போரின் வழியாக மோதல்களுக்கு தீர்வுகாண முடியாது, மாறாக, பேச்சுவார்த்தைகள் வழியாகவே அமைதியைக் கட்டியெழுப்ப முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளை நோயால் உலகம் துன்புற்றிருக்கும் இவ்வேளையில், உலகிலுள்ள அனைத்து மோதல்களும் உடனடியாக நிறுத்தப்படுமாறு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் நூலக அறையிலிருந்து மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மூவேளை செப உரையின் இறுதியில் விடுத்த அழைப்பு, 5 நாட்களுக்கு முன் ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், போர் நிறுத்தங்களுக்கு விடுத்த அழைப்பை ஒத்ததாக இருந்தது.

தொற்றுநோய் பரவலைத் தடுப்பதில் மனிதாபிமானப் பணிகளை ஆற்றிவரும் மக்கள், நோயாளிகளுக்கு மருத்துவ மற்றும் ஏனைய உதவிகளை ஆற்றுவதற்கு உதவும் நோக்கத்தில், போர் நிறுத்தங்கள் இடம்பெறவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரின் வழியாக மோதல்களுக்கு தீர்வுகாண முடியாது, மாறாக, பேச்சுவார்த்தைகள் வழியாகவே அமைதியைக் கட்டியெழுப்ப முடியும் என மேலும் கூறினார்.

இன்றைய தொற்று நோய் பிரச்சனையில், சிறைக் கைதிகள் நிலை குறித்து சிந்திக்குமாறும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சிறைக் கைதிகள் அதிக எண்ணிக்கையில் சிறைகளில் வைக்கப்பட்டிருப்பது குறித்த மனித உரிமைகள் அவையின் அறிக்கை ஒன்றை தான் வாசிக்க நேர்ந்ததாகவும், இந்த பிரச்சனை குறித்து, பொறுப்பிலுள்ளோர் கவனத்தில் கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 March 2020, 14:38