மறைக்கல்வி உரையின்போது..........050220 மறைக்கல்வி உரையின்போது..........050220 

ஏழ்மையின் இரு வடிவங்கள் குறித்து திருத்தந்தையின் டுவிட்டர்

"நம் மனித இயல்பில் வெளிப்படும் வறுமையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது, மற்றும், உள்ளச் சுதந்திரத்துடன் பிறரை அன்புகூர்வதற்கு, நாம் இவ்வுலக செல்வங்களிலிருந்து விடுபட தேடிக்கொள்ளும் வறுமையும் உள்ளது" - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசு வழங்கிய மலைப்பொழிவில் காணப்படும் ‘பேறுபெற்றோர்’ பகுதியை மையப்படுத்தி, சனவரி 29, கடந்த புதனன்று, ஒரு புதிய மறைக்கல்வித் தொடரைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்" என்ற முதல் பேற்றினை பிப்ரவரி 5, இப்புதனன்று தன் மறைக்கல்வி உரையின் மையமாகக் கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அதே எண்ணத்தை @pontifex என்ற தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட திருத்தந்தை, 'பொது சந்திப்பு' என்று பொருள்படும், #GeneralAudience என்ற ஹாஷ்டாக்குடனும், 'பேறுகள்' என்று பொருள்படும், #Beatitudes என்ற ஹாஷ்டாக்குடனும், தன் டுவிட்டர் செய்தியைப் பதிவுசெய்தார்.

"நம் மனித இயல்பில் வெளிப்படும் ஏழ்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது, மற்றும், உள்ளச் சுதந்திரத்துடன் பிறரை அன்புகூர்வதற்கு, நாம் இவ்வுலக செல்வங்களிலிருந்து விடுபட தேடிக்கொள்ளும் ஏழ்மையும் உள்ளது" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 82 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 839 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 65 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2020, 14:54