தேடுதல்

Vatican News
வத்திக்கான் வானொலியைப் பார்வையிடும் திருத்தந்தை 12ம் பயஸ் வத்திக்கான் வானொலியைப் பார்வையிடும் திருத்தந்தை 12ம் பயஸ் 

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் குறித்த இரகசிய ஆவணங்கள்

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இரண்டாம் உலகப் போர் காலத்தில், 1939ம் ஆண்டு முதல், 1958ம் ஆண்டு வரை, திருஅவையை வழிநடத்தியவர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கடினமான இதயங்களை மிருதுவாக்கும் மருந்து, இறையாசீர் குறித்த நம் நினைவுகளே என்று, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 18, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய திருப்பலி மறையுரையையொட்டி, #HomilySantaMarta என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள, திருத்தந்தை, இதயத்திற்குள்ளேயே கடினமாகிப்போன சிலவற்றை நாம் ஒவ்வொருவரும் கொண்டுள்ளோம், இறைவனிடமிருந்து நாம் பெற்றுள்ள ஆசீரை மீண்டும் நினைவுக்குக் கொணர்வது, அக்கடின இதயம் மிருதுவாவதற்குரிய மருந்தாகும். நம் இதயம் திறந்திருக்கவும், விசுவாசமுடன் செயல்படவும் இது உதவுகிறது என்று அதில் எழுதியுள்ளார்.

திருத்தந்தை 12ம் பயஸ்

மேலும், 1939ம் ஆண்டு முதல், 1958ம் ஆண்டு வரை, திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் குறித்த ஆவணங்கள் திறக்கப்படவுள்ளதை குறித்து, வரும் வியாழனன்று செய்தியாளர் கூட்டம் இடம்பெறும் என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது திருஅவையை வழிநடத்திய இத்திருத்தந்தை குறித்த இரகசிய ஆவணங்கள், வருகிற மார்ச் மாதம் திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

18 February 2020, 14:55