தேடுதல்

Vatican News
அமேசான் பற்றி வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தின்போது அமேசான் பற்றி வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தின்போது  (AFP or licensors)

திருத்தந்தையின் அச்சேரா மேய்ப்புப்பணி பயணம், மே 24,2020

அமேசான் பற்றி 2019ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் தீர்மானத் தொகுப்பு, ”அன்புள்ள அமேசான்‘’ என்ற தலைப்பில், வரும் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற மே மாதம் 24ம் தேதி, தென் இத்தாலியின் அச்சேரா (Acerra) மறைமாவட்டத்திற்கு, மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்று, பிப்ரவரி 8, இச்சனிக்கிழமையன்று அம்மறைமாவட்டம் அறிவித்துள்ளது. 

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Laudato si' அதாவது இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலை வெளியிட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இம்மேய்ப்புப்பணி பயணம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

"நெருப்புகளின் பூமி" எனப்படும் இப்பகுதியின் மக்களைச் சந்திப்பதற்கு திருத்தந்தை செல்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

நேப்பிள்ஸ் பகுதியிலுள்ள மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான அச்சேரா, அந்நகருக்கு வடகிழக்கே, ஏறத்தாழ 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. Camorra குற்றக்கும்பல் அமைப்பால், சட்டத்திற்குப் புறம்பே கொட்டப்பட்ட குப்பைகளால், அச்சேரா, 1990களிலிருந்து 2000மாம் ஆண்டுகள் வரை, கடுமையான குப்பை மேலாண்மை பிரச்சனையை எதிர்நோக்கியது. இதனால் அப்பகுதியில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. 2009ம் ஆண்டில், 350 மில்லியன் யூரோக்களுக்கு அதிகமான  செலவில், அச்சேரா குப்பைகள் எரிக்கப்பட்டன. இவை, ஆண்டுக்கு, ஆறு இலட்சம் டன் குப்பைகள் என்ற முறையில் எரிக்கப்பட்டன. இவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட மின்சக்தி, ஆண்டுக்கு 2 இலட்சம் குடும்பங்களுக்குப் போதுமானதாக இருந்தது என விக்கிப்பீடியா சொல்கிறது.      

அன்புள்ள அமேசான்

மேலும், அமேசான் பற்றி 2019ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி முதல், 27ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தின் தீர்மானத் தொகுப்பு, ”Querida Amazonia அதாவது அன்புள்ள அமேசான்‘’ என்ற தலைப்பில், பிப்ரவரி 12, வருகிற புதன்கிழமையன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

08 February 2020, 15:43