தேடுதல்

கிறிஸ்தவத்தின் அடையாளம் கிறிஸ்தவத்தின் அடையாளம்  

13 புதிய மறைசாட்சிகள் அருளாளர்களாக...

இத்தாலி, இஸ்பெயின், மெக்சிகோ, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து இறைஊழியர்களின் புண்ணிய வாழ்வு தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதற்கு, திருத்தந்தை அனுமதியளித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அருளாளர் மற்றும், வணக்கத்துக்குரியவர் நிலைகளுக்கு உயர்த்துவதற்கென, புண்ணிய நற்பண்புகளைக் கொண்ட, 13 மறைசாட்சிகள் மற்றும் ஐந்து இறை ஊழியர்களின் வாழ்வு தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று அனுமதியளித்துள்ளார்.

அருளாளர் மற்றும், புனிதர் நிலைகளுக்கு உயர்த்தும் பணிகளையாற்றும் திருப்பீட பேராயத் தலைவர், கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், சனவரி 23, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் சந்தித்து, இந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

கப்புச்சின் சபையைச் சேர்ந்த Benedetto di Santa Coloma de Gramenet அவர்களும், அவரோடு சேர்ந்த இருவரும், இஸ்பெயின் நாட்டில், 1936ம் ஆண்டு, ஜூலை 24க்கும், ஆகஸ்ட் 6ம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் விசுவாசத்திற்காக கொல்லப்பட்டனர். 

இயேசுவின் திருஇதய மறைப்பணியாளர் சபையின் அருள்பணியாளர்களாகிய Giuseppe Maria Gran Cirera அவர்களும், அவரோடு சேர்ந்த இருவரும், ஏழு பொதுநிலை விசுவாசிகளும், குவாத்தமாலாவில், 1980க்கும், 1991ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், விசுவாசத்திற்காக கொலைசெய்யப்பட்டனர்.

மேலும், இத்தாலி நாட்டு, Gesuati சபையின், Ferrara ஆயரான அருளாளர் Giovanni Tavelli da Tossignano (1386-1446) அவர்கள், மரியாவின் திருஇதய மறைப்பணியாளர் சபையை ஆரம்பித்தவர்.

இஸ்பெயின் நாட்டு இறைஊழியர் Gioacchino Masmitjá y Puig (1808-1886) அவர்கள், மரியாவின் திருஇதய மறைப்பணியாளர் சபையை ஆரம்பித்தவர்.

மெக்சிகோ நாட்டு இறைஊழியர் Giuseppe Antonio Plancarte y Labastida (1840-1898) அவர்கள், குவாதலூப்பே அமலமரி அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்தவர்.

இஸ்பெயின் நாட்டு இறைஊழியர் Giuseppe Pio Gurruchaga Castuariense (1881-1967) அவர்கள், குருவாம் கிறிஸ்துவின் பங்கு உதவியாளர் சபையை ஆரம்பித்தவர்.

பிரான்ஸ் நாட்டு இறைஊழியர் Antonio Maria da Lavaur (1825-1907) அவர்கள்,, கப்புச்சின் சபையைச் சேர்ந்த அருள்பணியாளர்.

பிரேசில் நாட்டு இறைஊழியர் Maria del Monte Carmelo della Santissima Trinità (1898-1966) அவர்கள், கார்மேல் ஆழ்நிலை தியான சபை துறவி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 January 2020, 15:51