கீழ்த்திசை ஞானிகள் வேடமிட்ட மூவர் கீழ்த்திசை ஞானிகள் வேடமிட்ட மூவர் 

ஞாயிறு, திங்கள் இரு நாள்களில் திருத்தந்தையின் டுவிட்டர்கள்

திருக்காட்சிப் பெருவிழாவையொட்டி, வழிபடுதலின் அர்த்தம் குறித்து, மூன்று டுவிட்டர் செய்திகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கீழ்திசையிலிருந்து மூன்று ஞானிகள் வந்து, குழந்தை இயேசுவை வழிபட்டதை, சனவரி 6, இத்திங்களன்று இத்தாலியும், வத்திக்கானும், சிறப்பித்த வேளையில், வழிபடுதலின் அர்த்தம் குறித்து, மூன்று டுவிட்டர் செய்திகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்,.

'நாம் இறைவனை வணங்காதபோது, நம்மையே நாம் வணங்குவதில் சென்று முடிகிறோம் என்பதை இந்நாளின் நற்செய்தி வாசகம் நமக்குக் கற்பிக்கிறது. இது ஆபத்து நிறைந்ததாகும். ஏனெனில், கடவுளுக்குப் பணிவிடைபுரிவதற்கு பதில், அவரை நாம் பயன்படுத்துகிறோம்,' என்ற சொற்கள் திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், 'நம் மனதை குழப்பும், மற்றும், இதயத்தை உணர்விழக்கச் செய்யும், அடிமை மன நிலைகளையும், வீணற்ற பொருட்களையும் தூக்கியெறிந்து, வாழ்வுக்கு எது முக்கியமானதோ அதில் மனதை ஒருநிலைப்படுத்துவதே வழிபடுதல்' என்ற செய்தியை, திருத்தந்தை பதிவு செய்துள்ளார்.

'வழிபடும்போது, ஞானிகளைப்போல், நம் வாழ்வுப் பயணத்தின் பொருளைக் கண்டுகொள்வோம். ஞானிகளைப்போல் நாமும் பெருமகிழ்ச்சியை அனுபவிப்போம்,' என்ற சொற்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மூன்றாவது டுவிட்டர் செய்தியாக இத்திங்களன்று வெளியிட்டார்.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘அன்பின் புனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் மாற விடப்படும் அழைப்பிற்கு நாம் பதிலளிக்க முடியும் என்பதாலேயே இறைவன் தொடர்ந்து நம்மிடையே வந்து, அவரின் வார்த்தையை நமக்கு கொடையாக வழங்குகிறார்' என எழுதியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2020, 15:06